விதவிதமான பயன்பாட்டில் மாங்காயும், மாம்பழமும்!

விதவிதமான பயன்பாட்டில் மாங்காயும், மாம்பழமும்!
Published on

மாங்காய் சீசன் வரப்போகிறது. அதனால் மாங்காய், மாம்பழம் இவற்றை எப்படியெல்லாம் பயன்படுத்திக் கொள்ளலாம் என்று பார்ப்போம்.

மாங்காய் சீசனில் மூன்று நான்கு மாங்காய்களை துருவி, அதனுடன் தேவைக்கு ஏற்ப உப்பு, மஞ்சள் தூள் சேர்த்து பிசிறி, வெயிலில் காயவைத்து எடுத்து வைத்துக் கொண்டால் தேவைப்படும் போது சிறிது எடுத்து தண்ணீரில் ஊற வைத்து, திடீர் தொக்கு செய்யலாம்.

மாங்காய் துருவலை காய வைத்து பிடித்து வைத்துக் கொண்டால், குழம்பு, பச்சடி, சட்னி என்று பல வகைகளில் சமைக்கலாம்.

மாம்பழச் சாறுடன் பால்பவுடர், சர்க்கரை கலந்து பர்பி செய்யலாம்.

மாங்காயை தோல் நீக்கி நறுக்கி, வேகவைத்து, சர்க்கரை பாகு சேர்த்து கிளறி ஜாம் செய்யலாம்.

மோர் குழம்புக்கு அரைக்கும் பொருட்களுடன் மாங்காய் சேர்த்தால் சுவையும், மணமும் கூடும்.

சட்னியில் புளிக்கு பதிலாக மாங்காயை சேர்த்தால், சுவையாக இருக்கும். உடம்புக்கு நல்லது.

மாம்பழங்களுடன் பால் சேர்த்து மாம்பழ பாசந்தி செய்யலாம்

மாங்காயை துருவி, வதக்கி கடுகு, கடலைப்பருப்பு, உளுத்தம் பருப்பு தாளித்து, விட்டால் சாதத்தில் போட்டு கிளறினால் சுவையான மாங்காய் பாத் தயார்.

மாம்பழம், பால் சர்க்கரை ஏலக்காய் பொடி கலந்து அரைத்து ஃப்ரிட்ஜில் வைத்து எடுத்தால் சுவையான சத்தான மேங்கோ மில்க் ஷேக் ரெடி .

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com