மருத்துவ குணம் நிறைந்த வெற்றிலை நெல்லி ரசம்

மருத்துவ குணம் நிறைந்த வெற்றிலை நெல்லி ரசம்

வெற்றிலை நெல்லி ரசம், ஜீரண சக்தியை அதிகரிக்கும், சளி தொல்லையை போக்கும். சுவாசப் பிரச்சினைகளுக்கும் ஏற்றது. உடல் வலியை போக்கக்கூடியது. நோய் எதிர்ப்பு சக்தியை உருவாக்கும். செய்வதும் மிக எளிது.

தேவையான பொருட்கள் :

முழு நெல்லிக்காய் - 10

வெற்றிலை - 4

துவரம் பருப்பு - ஒரு ஸ்பூன்

கறிவேப்பிலை - சிறிது

காய்ந்த மிளகாய் - 2

பூண்டு - 4 பற்கள்

மிளகு - ஒரு ஸ்பூன்

சீரகம் - அரை ஸ்பூன்

மஞ்சள் தூள் - ஒரு ஸ்பூன்

உப்பு தேவையான அளவு

தாளிக்க :

கடுகு, கருவேப்பிலை, சீரகம்

நெய் - 2 ஸ்பூன்

செய்முறை :

வாணலியில் நல்லெண்ணெய் ரெண்டு ஸ்பூன் விட்டு துவரம் பருப்பு, மிளகாய் வற்றல், பூண்டு, மிளகு, சீரகம் ஆகியவற்றை போட்டு வறுக்கவும். அத்துடன் கறிவேப்பிலை சிறிது, வெற்றிலை நான்கு கிள்ளி சேர்த்து இரண்டு பிரட்டு பிரட்டி எடுத்து சிறிது ஆறியதும் மிக்ஸியில் அரைக்கவும்.

முழு நெல்லிக்காயை தட்டி கொட்டையை எடுத்துவிட்டு மிக்ஸியில் போட்டு சிறிது நீர் சேர்த்து நைசாக அரைத்து எடுக்கவும்.

ஒரு பாத்திரத்தில் பூண்டு, மிளகு, வெற்றிலை, கறிவேப்பிலை ஆகியவற்றை அரைத்த விழுது சேர்த்து 4 கப் தண்ணீர் விட்டு தேவையான உப்பு, மஞ்சள் தூள் சேர்த்து இரண்டு நிமிடம் கொதிக்க விடவும். பிறகு அரைத்த நெல்லிக்காய் விழுதை கொட்டி ஜஸ்ட் அதிகம் இல்லை ஒரு நிமிடம் மட்டும் கொதிக்க விடவும். கொதித்ததும் மேலும் அரை கப் நீர் விட்டு மொச்சு பதத்தில் அதாவது கொதி வருவதற்கு முன் இறக்கி நெய்யில் கடுகு, கருவேப்பிலை, சீரகம் ஆகியவற்றை தாளித்துக் கொட்ட சுவையான மருத்துவ குணம் நிறைந்த வெற்றிலை நெல்லிக்காய் ரசம் ரெடி.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com