மிளகு குழம்பு
மிளகு குழம்பு

மிளகு குழம்பு!

தேவையான பொருட்கள்:

1. மிளகு - 2 ஸ்பூன்

2. சீரகம் - 1 ஸ்பூன்

3. சோம்பு - 1 ஸ்பூன்

4. கசகசா - 1 ஸ்பூன்

5. தேங்காய் துருவல் - 2 ஸ்பூன்

6. சின்ன வெங்காயம் - 50 கிராம்

7. பூண்டு - 10 பல்

8. கருவேப்பிலை - சிறிதளவு

9. கடுகு - 1/2 ஸ்பூன்

10. வெந்தயம் - 1/2 ஸ்பூன்

11. வற்றல் -1

12. புளி - பெரியநெல்லி அளவு

13. மிளகாய் தூள் - 1/2 ஸ்பூன்

14. மல்லி தூள் - 1/4 ஸ்பூன்

15. மஞ்சள்தூள் - 1/4 ஸ்பூன்

16. உப்பு - தேவையான அளவு

17. நல்லெண்ணெய் - தேவையான அளவு

செய்முறை:

1. கடாயில் மிளகு, சீரகம், சோம்பு,கசகசா சேர்த்து வறுக்கவும்.

2. பாதி வறுபட்டதும் தேங்காய் துருவல் சேர்த்து சிறுதீயில் வைத்து நன்கு சிவக்க வறுக்கவும்

3. ஆறியபின் நன்கு அரைத்துக்கொள்ளவும்.

4. பின் கடாயில் எண்ணெய் ஊற்றி கடுகு, வெந்தயம், கருவேப்பிலை, வற்றல் சேர்த்து தாளிக்கவும்.

5. பின் நறுக்கிய சின்னவெங்காயம், பூண்டு சேர்க்கவும்.

6. வெங்காயம் நன்கு வதங்கியதும் அரைத்த மசாலா , வற்றல் தூள் , மல்லி தூள், மஞ்சள் தூள் , உப்பு சேர்த்து பச்சை வாசனை போகும் வரை நன்கு வதக்கவும்.

7. பின் புளிகரைசல் சேர்த்து நன்கு கொதித்ததும் சிறுதீயில் வைத்து எண்ணெய் பிரியவும் இறக்கவும்.

மிகவும் ருசியான மிளகு குழம்பு தயார்

ருசியாக இருப்பது மட்டுமின்றி, ஜலதோஷம், இருமலுக்கு அருமருந்து.

Other Articles

No stories found.
Kalki Online
kalkionline.com