Mushroom Tikka Masala Recipe
Mushroom Tikka Masala Recipe

காளான் டிக்கா மசாலா ரெசிபி!

ங்களுக்கு காளான் பிடிக்கும் என்றால், வீட்டில் உள்ள அனைவருமே காளானை விரும்பி சாப்பிடுவார்கள் என்றால், ஒருமுறை இந்த காளன் டிக்கா மசாலாவை செய்து பாருங்கள். இந்த மசாலாவை பூரி மற்றும் சப்பாத்தியுடன் வைத்து சாப்பிட நன்றாக இருக்கும். சாதத்துடன் சாப்பிட விரும்புபவர்களும் தாராளமாக சாப்பிடலாம். இந்த பதிவில் காளான் டிக்கா மசாலா எளிய முறையில் எப்படி செய்வதெனப் பார்க்கலாம். 

தேவையான பொருட்கள்:

காளான் - 2 கப் 

வெங்காயம் - 2

கடலை மாவு - 2 ஸ்பூன் 

தயிர் - ¼ கப்

குடைமிளகாய் - ½ கப்

இஞ்சி பூண்டு பேஸ்ட் - 1 ஸ்பூன் 

கரம் மசாலா - 2 ஸ்பூன் 

மஞ்சள் தூள் - ½ ஸ்பூன் 

மிளகாய் தூள் - 1 ஸ்பூன் 

எண்ணெய் - தேவையான அளவு

எலுமிச்சை சாறு - 1 ஸ்பூன் 

கசூரி மேத்தி - சிறிதளவு

உப்பு - தேவையான அளவு

செய்முறை:

முதலில் ஒரு பாத்திரத்தில் கடலை மாவு, மிளகாய் தூள், தயிர், கரம் மசாலா, மஞ்சள் தூள் சேர்த்து கலந்துகொள்ள வேண்டும். பின்னர் ஒரு கடாயை அடுப்பில் வைத்து அதில் சிறிதளவு எண்ணெய் ஊற்றி சூடானதும் இஞ்சி பூண்டு பேஸ்ட் போட்டு வதக்க வேண்டும். 

பின்னர் அதில் குடைமிளகாய் மற்றும் வெங்காயம் சேர்த்து வதக்கி, காளானையும் சேர்த்து நன்கு வதக்க வேண்டும். காளானில் உள்ள நீர் முழுமையாக வற்றியதும் அதில் முன்னர் தயாரித்து வைத்துள்ள தயிர் கலவையை சேர்த்து கிளறி விட வேண்டும். 

இந்த மசாலாவில் உள்ள பச்சை வாடை நீங்கி, காளான் நன்கு வெந்ததும் சுவைக்கு ஏற்ப உப்பு சேர்த்து விட்டு, எலுமிச்சை சாறு மற்றும் கசூரி மேத்தி சேர்த்து கிளறிவிட்டால், காளான் டிக்கா மசாலா ரெடி.

Related Stories

No stories found.
logo
Kalki Online
kalkionline.com