
தேவையான பொருட்கள்:
1.இட்லி அரிசி - 2 கப்
2.உளுந்தம் பருப்பு - 1/2 கப்
3. அவல் - 1/2 கப்
4. துவரம்பருப்பு - 2 டீஸ்பூன்
5.கடலைபருப்பு - 2 டீஸ்பூன்
6. உப்பு - தேவையான அளவு
7. வெந்தயம் - 1 டீஸ்பூன்
உருளைக்கிழங்கு மசாலா:
1.நறுக்கிய வெங்காயம் - 1
2.உருளைக்கிழங்கு - 2
3.பச்சை மிளகாய் - 3
4.மல்லிதழை - சிறிதளவு 5.நறுக்கிய பூண்டு - 1 டீஸ்பூன்
6.நறுக்கிய இஞ்சி - 1 டீஸ்பூன்
7.கடுகு - 1 டீஸ்பூன்
8.உப்பு - தேவையான அளவு
9.எண்ணெய் - தேவையான அளவு
சிகப்பு சட்னி
1.வற்றல் - 6
2.வெங்காயம் - 1 சிறியது
3.பூண்டு - 3 பல்
4.உப்பு - தேவையான அளவு
5.எண்ணெய் - தேவையான அளவு
செய்முறை:
1.அரிசியைத் தனியாக ஊற வைத்து, வெந்தயம் மற்றும் உளுந்தம் பருப்பு, மற்றும் பருப்புகளை தனியாக தண்ணிரில் 3-4 மணிநேரம் அல்லது இரவு முழுவதும் ஊறவைக்கவும்.
2.மறுநாள் அவலில் 10 நிமிடம் ஊறவைத்து மாவுடன் சேர்த்து அரைக்கவும்.
3.உப்பு சேர்த்து, 8-10 மணி நேரம் புளிக்க வைக்கவும்.
4.வாணலியில் எண்ணெய் ஊற்றி வெங்காயம், வற்றல், பூண்டு சேர்த்து வதக்கி ஆறவைத்து அரைத்து கொள்ளவும்.
5.வாணலியில் எண்ணெய் ஊற்றி
கடுகு தாளித்து வெங்காயம் சேர்த்து நன்கு வதங்கும் வரை வறுக்கவும்.
6.இஞ்சி, பூண்டு, கறிவேப்பில்லை ,பச்சைமிளகாய்சேர்க்கவும். மஞ்சள் தூள் சேர்க்கவும்.
7.பின்னர் வேகவைத்து மசித்த உருளைக்கிழங்கு சேர்க்கவும்.
உப்பு சேர்த்து சிறுதீயில் வைத்து ஒருசேர கிளறி இறக்கவும்.
8.தோசை கல் சூடானதும் கரண்டியின் உதவியுடன் வட்ட வடிவத்தில் தோசையை ஊற்றியதும், தோசை முழுவதும் சில துளிகள் எண்ணெயைத் தெளிக்கவும்.
9.நடு பகுதி சிவந்து வரும் வரை வேக வைக்கவும்.
சிவப்பு சட்னியை தோசை முழுவதும் தடவி விடவும்.
10.ஒரு பாதி முழுவதும் உருளைக்கிழங்கு மசாலாவை பரப்பவும்.1 நிமிடம் கழித்து தோசையை மடித்து சூடாக பரிமாறவும்.