நீர்ச் சீடை!

நீர்ச் சீடை!

தேவையான பொருட்கள்:

புழுங்கலரிசி – 1 கிலோ, து.பருப்பு - 100 கிராம், தேங்காய் மூடி - 1, மிளகாய் வத்தல் -15, பெருங்காயம் - சிறிது, உப்பு - தேவையான அளவு, தேங்காய் எண்ணெய் - 2 தேக்கரண்டி, கடுகு - 1 டீ ஸ்பூன்.

செய்முறை:

ரிசியையும், பருப்பையும் சேர்த்து சுமார் நான்கு மணி நேரம் ஊறவைக்கவும். நன்றாக ஊறியவுடன் உப்பு, மிளகாய், பெருங்காயம் சேர்த்து கிரைண்டரிலோ அல்லது உரலிலோ கெட்டியாக அரைக்கவும். பிறகு தேங்காயைத் துருவி மாவில் சேர்த்துப் பிசைந்துகொள்ளவும். பிறகு அந்த மாவை ஒரு காய்ந்த துணியில் கொட்டி சிறிது நேரம் பரப்பி விடவும். மாவில் கொஞ்சம் ஈரம் வற்றியவுடன் சீடைக்கு உருட்டுவது போல சிறிய சிறிய உருண்டைகளாக உருட்டிக்கொள்ளவும்.

பத்து நிமிடங்கள் கழித்து ஒரு வெண்கலப் பானையை அடுப்பில் வைத்து, அதில் தேங்காய் எண்ணெயை ஊற்றி, நன்கு காய்ந்ததும் கடுகு, ஒரு மிளகாய் வத்தல் போட்டு தாளித்துக்கொண்டு அதில் நான்கு தம்ளர் தண்ணீர் ஊற்றவும். ஒரு துளி உப்பைத் தண்ணீரிலே போடவும். தண்ணீர் நன்கு தளதளவென கொதிக்கும்போது உருட்டிய சீடைகளில் மூன்றில் ஒரு பகுதியை ஒரு தட்டில் எடுத்துக்கொண்டு கொதிக்கும் தண்ணீரில் போடவும். இரண்டு நிமிடங்கள் கழித்து அதே அளவு சீடையைத் தட்டில் எடுத்துக்கொண்டு பானையில் போடவும். பிறகு இரண்டு நிமிடங்கள் கழித்து மீதி எல்லாச் சீடைகளையும் எடுத்துத் தண்ணீரில் போடவும். கேஸை நன்றாக எரிய விடவேண்டும். 'சிம்'மில் வைக்கக் கூடாது. ஐந்து நிமிடங்கள் கழித்து ஒரு கரண்டி அல்லது ஒரு சட்டுவத்தின் அடி பாகத்தால் லேசாகக் கிளறி விடவும். ஐந்து நிமிடங்கள் கழித்துப்பார்த்தால் சீடைகள் நன்றாக வெந்து போய் தண்ணீர் சுண்டிவிடும். பிறகு ஐந்து நிமிடங்கள் கேஸை சிம்மில் வைத்து விட்டு அணைத்து விடவும். பானையை ஒரு தட்டுப் போட்டு மூடி வைத்து விட்டு ஐந்து நிமிடங் களுக்குப் பிறகு திறந்து பார்த்தால் அருமை யான நீர்ச் சீடைகள் ரெடி. மிகச் சுவையான இந்த நீர்ச் சீடையைக் குழந்தைகள் விரும் பிச் சாப்பிடுவார்கள். பெரியவர் களுக்கும் எளிதில் ஜீரணமாகும். பெரியவர்களுக்கும் எளிதில் ஜீரணமாகும்.

 - ஜி. செண்பகம், சென்னை - 17.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com