
கீரை வகைகள் அனைத்துமே சத்துகள் மிகுந்தது என்றாலும், வீட்டில் இருக்கும் சிறு தொட்டியில் போட்டாலே செழித்து வளரும் வெந்தயக் கீரையின் சிறப்பு குறிப்பிடத்தக்கது எனலாம். காரணம் நீரிழிவு பாதிப்பு உள்ளவர்களுக்கு அதைக் கட்டுப்படுத்த வெந்தயம் சிறந்தது என அறிவோம். அதே வெந்தயம் கீரையாகும் போது அதன் சத்துகள் இன்னும் மேம்படும்.
வெந்தயக் கீரையில் இருக்கும் சத்துக்கள் என்ன தெரியுமா? இரும்பு சத்து விட்டமின், ஏன்? சுண்ணாம் புச்சத்தும், நார்ச்சத்தும் இக்கீரையில் அதிக அளவில் உள்ளது.
இந்தக் கீரை உடல் சூட்டை தணிக்க உதவும். நீரிழிவு நோயாளிகளுக்கு மிகவும் நல்லது. இதனை பொறியல் கூட்டு சப்பாத்தி சப்ஜி என செய்து உணவில் சேர்த்துக் கொள்ளலாம். சரி. வெந்தயக்கீரை சப்பாத்தி எப்படி செய்வது என்று பார்ப்போம்.
தேவையான பொருட்கள்:
கோதுமை மாவு இரண்டு கப்
நறுக்கிய வெந்தயக்கீரை ஒரு கப்
கரம் மசாலா ஒரு டீஸ்பூன்
மிளகாய்பொடி ஒரு ஒரு டீஸ்பூன்
நறுக்கிய பச்சை மிளகாய் ஒன்று
உப்பு தேவையான அளவு
சப்பாத்தி மாவுடன் மேற்கூறிய பொருட்களை சேர்ந்த சப்பாத்தி மாவு பதத்திற்கு பிசைந்து சப்பாத்திக்களாக திரட்டி தேவைப்படுபவர்கள் நெய் அல்லது எண்ணைய் சிறிது மேலே தடவி சுடலாம் . இதற்கு தொட்டுக்கொள்ள தக்காளி சப்ஜி வெங்காய தொக்கு போன்றவைகள் செம காம்பினேஷன் ஏன் இதில் சப்ஜி செய்ய முடியாதா ? யார் சொன்னது? வெந்தயக்கீரை சப்ஜிக்கான ரெசிபி இதோ
வெந்தயக்கீரை சப்ஜி
தேவையான பொருட்கள்:
வெந்தயக்கீரை - ஒரு கட்டு
பெரிய வெங்காயம் – இரண்டு (நறுக்கியது)
தக்காளி - ரெண்டு (விழுதாக அரைத்துக் கொண்டது)
இஞ்சி பூண்டு விழுது - ஒரு ஸ்பூன்
தனியா பொடி - ஒரு டேபிள் ஸ்பூன்
சீரக பொடி - அரை டீஸ்பூன்
வேகவைத்த வெள்ளை பட்டாணி - 25 கிராம்
கரம் மசாலா தூள்- அரை டீஸ்பூன்
சிவப்பு மிளகாய் தூள் - தேக்கரண்டி அளவு
உப்பு -தேக்கரண்டி அளவு
செய்முறை:
முதலில் வெந்தயக்கீரையை ஆய்ந்து நன்றாக கழுவி சுத்தம் செய்து நறுக்கிக்கொள்ளவும் . ஒரு கடாயில் எண்ணெய் விட்டு சூடானதும் சீரகம் தாளித்து பின்பு வெங்காயத்தையும் போட்டு நன்கு வதக்கி அதனுடன் இஞ்சி பூண்டு சேர்த்து வதக்கவும்.வாசம் வந்து பொன்னிறமாக வாங்கியதும் அதனுடன் தனியா தூள் சீரகத்தூள் மிளகாய்த்தூள் கரம் மசாலாத்தூள் இவற்றை சேர்க்கவும். அதில் நறுக்கிய வெந்தயக் கீரையை போட்டு நன்கு வதக்கவும். இத்துடன் தக்காளி விழுதை சேர்த்து வதக்கி உப்பு சேர்த்து வேகவைத்த வெள்ளை பட்டாணியை சேர்க்கவும். எண்ணெய் தனியாக பிரித்து வரும் வரை மிதமான தீயில் வைத்து கிளறி விடவும். வெந்தயக்கீரை சப்ஜி ரெடி இதனை சப்பாத்தியுடன் தொட்டுக் கொள்ள நன்றாக இருக்கும் டயட் இருப்பவர்களுக்கும் தேங்காய் சேர்த்து செய்யும் குருமாவிற்கு பதிலாக இதனை வைத்து சாப்பிட நல்லது. இதனால் ருசியாகவும் இருக்கும் அதே சமயத்தில் உடல் எடையும் குறையும்.