பத்தே நிமிடத்தில் சத்தான சுவையான வெந்தய சாதம்!

பத்தே நிமிடத்தில் சத்தான சுவையான வெந்தய சாதம்!

தேவையான பொருட்கள்:

சாப்பாட்டு அரிசி - 200 கிராம்

மஞ்சள் தூள் - அரை ஸ்பூன்

மிளகாய் தூள்- ஒரு ஸ்பூன்

பூண்டு – ஐந்து பெரிய பற்கள்

சிறிய வெங்காயம்- 10

பெரிய வெங்காயம் -1

கறிவேப்பிலை – சிறிதளவு

வெந்தயம் - ஒரு ஸ்பூன்

சீரகம் - அரை ஸ்பூன்

உப்பு – தேவையான அளவு

தேங்காய் துண்டுகள்- நான்கு

தக்காளி – இரண்டு

பச்சை மிளகாய் -  இரண்டு

செய்முறை:

ரிசியை தண்ணீரில் அரை மணி நேரம் ஊற வைக்கவும். மூன்று முறை நன்றாக கழுவி விட்டு தண்ணீரை வடித்துக் கொள்ளவும். குக்கரில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் வெந்தயம் போட்டு பொன்னிறமாக பொரிக்கவும். சீரகத்தையும் போட்டு பொரிக்கவும். தோல் உரித்து நறுக்கிய சின்ன, பெரிய வெங்காயம், பூண்டு, மற்றும் கருவேப்பிலையை சேர்க்கவும். மஞ்சள்தூள், மிளகாய்த்தூள் சேர்த்து வதக்கவும். நீளவாக்கில் அரிந்த பச்சை மிளகாய், பொடியாக நறுக்கிய தேங்காய் துண்டுகள், தக்காளி, தேவையான உப்பு சேர்க்கவும். பின்பு அரிசியை சேர்த்து 4 டம்ளர் நீரூற்றி மூன்று விசில் விட்டு இறக்கவும்.  இப்போது சுவையான சத்தான வெந்தய சாதம் ரெடி.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com