ஊறவைத்து வேகவைத்த கருப்பு கொண்டைக்கடலை அரை கப், தோல் சீவி நறுக்கிய வாழைக்காய் 100 கிராம்,
சேனைக் கிழங்கு 100 கிராம், வெள்ளை பூசணி 50 கிராம், மஞ்சள் பூசணி 50 கிராம், தேங்காய் துருவியது 300 கிராம், சீரகம் 1 டீஸ்பூன், மிளகுத் தூள் 2 டீஸ்பூன், மிளகாய் தூள் 1 டீஸ்பூன், மஞ்சள் தூள் அரை டீஸ்பூன் தேங்காய் எண்ணெய் ஒரு டேபிள்ஸ்பூன், கடுகு ஒரு டீஸ்பூன், உளுத்தம் பருப்பு 2 டீஸ்பூன், கறிவேப்பிலை 3 இணுக்கு, சிவப்பு மிளகாய் 2, உப்பு தேவைக்கேற்ப.
செய்முறை: ஒரு பாத்திரத்தில் கொண்டைக்கடலை, காய்கள், மஞ்சள் தூள், மிளகாய் தூள், அரை டீஸ்பூன் மிளகுத்தூள், உப்பு, தேவையான அளவு தண்ணீர் ஊற்றி அடுப்பில் வைத்து வேகவிடவும். 200 கிராம் தேங்காய் பூ, சீரகம், இரண்டு இணுக்கு கறிவேப்பிலை ஆகிவற்றை மிக்ஸியில் கொரகொரப்பாக அரைத்தெடுக்கவும். காய்கள் வெந்ததும் அரைத்த விழுதை அதனுடன் சேர்த்து, 1½ ஸ்பூன் மிளகுத்தூள் சேர்த்து கலந்து விடவும். ஒரு கடாயில் தேங்காய் எண்ணையை ஊற்றி சூடானதும் கடுகு, உளுத்தம் பருப்பு, சிவப்பு மிளகாய், நூறு கிராம் தேங்காய்ப்பூ, கறிவேப்பிலை தாளித்து பொன்னிறம் வந்ததும் கூட்டில் சேர்த்துக் கலந்து விட்டு இறக்கவும். சுவையான ஓணம் ஸ்பெஷல் கூட்டுக்கறி தயார்.