ரெசிபி கார்னர்
பனங்கிழங்கு புட்டு

செய்முறை:
தேவையான அளவு பனங்கிழங்குகளை வேக வைத்து எடுத்துக் கொள்ளவும்.
ஆறிய பின் நாரை உரிக்கவும்.
தடிமனான பகுதியை சிறு சிறு துண்டுகளாக்கி வெயிலில் காய வைக்கவும்.
நன்கு, ஈரப்பதமின்றி காய்ந்தபின் அவற்றை மிஷினில் கொடுத்து மாவாக்கிக் கொள்ளவும். பின் அந்த மாவை சலித்தெடுக்கவும்.
மாவில் லேசா தண்ணி தெளித்துப் பிசிறி, இட்லி தட்டில் பரத்தி, ஆவியில் வேக வைத்து எடுக்கவும்.
சூடா இருக்கும்போதே, தேவையான அளவு சர்க்கரை, தேங்காய்ப் பூ துருவல், ஏலக்காய் பொடி, நெய், சிவக்க வறுத்து உடைத்த முந்திரி சேர்த்து கலக்கவும்.
இப்போது, சத்தும் சுவையும் நிறைந்த பனங்கிழங்கு புட்டு தயார்.