பப்பாளிகாய் லாலிபாப்!

பப்பாளிகாய் லாலிபாப்
பப்பாளிகாய் லாலிபாப்

தேவையான பொருட்கள்:

  • 1 கப் - பச்சை பப்பாளி (துருவியது)

  • 3/4 கப் - உருளைக்கிழங்கு (வேகவைத்து, மசித்தது)

  • 1 - வெங்காயம் - (சிறியதாக நறுக்கியது)

  • 1 டீஸ்பூன் - மிளகாய் தூள்

  • 1/2 டீஸ்பூன் - கரம் மசாலா

  • 1 டீஸ்பூன் - கொத்தமல்லி இலை

  • 1 டீஸ்பூன் - இஞ்சி பூண்டு விழுது

  • 1 டீஸ்பூன் - சோள மாவு

  • தேவையான அளவு - ரொட்டி துண்டுகள் -

  • உப்பு, எண்ணெய் - தேவையான அளவு

செய்முறை:

உருளைக்கிழங்கை வேகவைத்து, தோலுரித்து மசித்து கொள்ளவும்.

ஒரு அகலமான பாத்திரத்தில், பிசைந்த உருளைக்கிழங்கு, துருவிய பப்பாளி, வெங்காயம், இஞ்சி, பூண்டு விழுது, மிளகாய் தூள், கரம் மசாலா, உப்பு மற்றும் கொத்தமல்லியை போட்டு நன்கு பிசைந்து கொள்ளவும்.

சோள மாவை சிறிது தண்ணீரில் கரைத்து, உருண்டைகளை சோள மாவு கரைசலில் தோய்த்து, பிரெட் துண்டுகளில் பிரட்டி கொள்ளவும்.

இந்த உருண்டைகளை எண்ணெயில் பொரித்து எடுக்கவும். பின்னர் உருண்டைகளில் டூத்பிக் துளைத்து சாஸூடன் சேர்த்து சூடாக பரிமாறவும்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com