பீர்க்கங்காய் பொரியல் செய்வது எப்படி?

தேவையானவை :
பீர்க்கங்காய் - 2
சின்ன வெங்காயம் - 1 கப்
பச்சை மிளகாய் - 2
கடுகு - 1/2 ஸ்பூன்
உளுத்தம் பருப்பு - 1 ஸ்பூன்
கடலை பருப்பு - 1 ஸ்பூன்
கறிவேப்பிலை - 1 கொத்து
சீரகத்தூள் - 1 ஸ்பூன்
தேங்காய் துருவல் - 1 கப்
உப்பு - தேவைக்கு.
செய்முறை :
பீர்க்கங்காயை தோல் சீவி சிறிது பெரிய அளவில் வெட்டி கொள்ளவும். வெங்காயத்தை சிறிய துண்டுகளாக நறுக்கவும்.
கடாயை அடுப்பில் வைத்து சூடானதும் எண்ணெய் விட்டு காய்ந்ததும் கடுகு, உளுத்தம் பருப்பு, கடலைப்பருப்பு போட்டு பொரிந்ததும் கறிவேப்பிலை, நேராக கீறிய மிளகாய் போட்டு வதக்கி பின்னர் வெங்காயம் போட்டு வதக்கிவிட்டு பீர்க்கங்காயை போட்டு வதக்கவும். பிறகு உப்பு சேர்த்து 2 நிமிடம் மூடி வைக்கவும்.
காயில் தண்ணீர் இருப்பதால் தண்ணீர் ஊற்ற தேவையில்லை.
வெந்ததும் சீரகத்தூள் சேர்த்து, கிண்டி விட்டு பின்னர் தேங்காய் துருவல் சேர்த்து 2 நிமிடம் கிண்டி இறக்கவும்.
சத்தான, சுவையான பீர்க்கங்காய் பொரியல் தயார்.