பொங்கலோ பொங்கல்!

பொங்கலோ பொங்கல்!

கரும்புச்சாறு பொங்கல்

தேவை: பச்சரிசி – 300 கிராம், கெட்டியான தேங்காய்ப் பால் – 1 தம்ளர், கரும்புச்சாறு – 2 தம்ளர், நெய் – 50 கிராம், முந்திரி பருப்பு – 10, ஏலப்பொடி – 1 ஸ்பூன்.

செய்முறை: அரிசியை நன்றாக களைந்து, குழைய விட வேண்டும். நன்றாக வெந்ததும் கரும்புச்சாறு ஊற்றி கலந்து, பின்பு கெட்டியான தேங்காய்ப்பால் ஊற்றிக் கிளற வேண்டும். நன்றாக சேர்ந்து வந்ததும் நெய்யில் வறுத்த முந்திரி, திராட்சை, ஏலக்காய் தூள் சேர்க்க வேண்டும். நெய்யைச் சேர்த்துக் கிளறி இறக்க சுவையாக இருக்கும்.

சாமை பொங்கல்

தேவை: சாமை அரிசி – 200 கிராம், பாசிப் பருப்பு – 50 கிராம், பால் – 50 மில்லி, மிளகு – 1 தேக்கரண்டி, மஞ்சள் பொடி – 1 சிட்டிகை, துருவிய இஞ்சி – 1 ஸ்பூன், மிளகு பொடி – 1 ஸ்பூன், பெருங்காயப் பொடி – 1 ஸ்பூன், நெய் – தேவையானது, சீரகம் – 1 ஸ்பூன், கறிவேப்பிலை – சிறிதளவு.

செய்முறை: சாமை அரிசியில் கல் இல்லாமல் பார்த்து பாசிப்பருப்புடன் தண்ணீர் சேர்த்து பால், பெருங்காயம், உப்பு, மஞ்சள்பொடி, மிளகு சேர்த்து வேகவைத்து இறக்க வேண்டும். வாணலியில் நெய்விட்டு, அடுப்பில் வைத்து காய்ந்ததும் முந்திரி, சீரகம், துருவிய இஞ்சி, மிளகு பொடி, கறிவேப்பிலை சேர்த்து தாளித்து அதில் போட்டு நன்றாக கலக்க வேண்டும்.

பால்கோவா பொங்கல்

தேவை: பச்சரிசி – 100 கிராம், பால் – 100 மில்லி, குங்குமப்பூ – 1 சிட்டிகை, சர்க்கரை – 200 கிராம், பால்கோவா – 100 கிராம், பாதாம் பருப்பு – 10, முந்திரி பருப்பு – 10.

செய்முறை: பச்சரிசியை குழைய வேக வைக்கவேண்டும். அடிகனமான வாணலியில் பால் விட்டு அடுப்பில் வைத்து குங்குமப்பூ போட்டு சுண்டக் காய்ச்சி பிறகு, சாதம், சர்க்கரை, பால்கோவா சேர்த்துக் கிளறி, முந்திரியையும், பாதாமையும் சேர்த்துக் கிளறி இறக்க வேண்டும்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com