வாயு தொல்லை நீக்கும் பூண்டு குழம்பு!

பூண்டு குழம்பு
பூண்டு குழம்பு

-சுரேஷ் தட்சிணாமூர்த்தி.

தேவையான பொருட்கள் :

பூண்டு - 250 கிராம்

புளி - 100 கிராம்

மிளகாய்பொடி- 75 கிராம்

வெந்தயம் - 1 ஸ்பூன்

கடுகு - ஒரு ஸ்பூன் + அரை ஸ்பூன்

சீரகம் - அரை ஸ்பூன்

பெருங்காயம் - அரை ஸ்பூன்

உப்பு தேவைக்கு ஏற்ப

நல்லெண்ணெய்- 100 மிலி

செய்முறை:

புளியை அதிகம் தண்ணி விடாமல் குழம்பு மாதிரி கெட்டியாக கரைத்து அதில், 250 கிராம் பூண்டில் 50 கிராம் பூண்டை தனியா அரைத்து கலந்து வைக்கவும். சீரகம், வெந்தயம், கடுகை எண்ணெய்விடாமல் பொரித்து எடுத்து பொடித்து வைக்கவும்.

அடுப்பில் வாணலியை வைத்து எண்ணெயை ஊற்றி காய்ந்ததும் ஒரு அரை ஸ்பூன் கடுகை போட்டு பொரிந்ததும் மீதம் உள்ள 200 கிராம் பூண்டை சேர்த்து 3 நிமிடம் நிதானமான தீயில் வதக்க வேண்டும்.

கொஞ்சம் கலர் மாறியதும் கரைத்து வைத்துள்ள புளி, பூண்டு கலவையை சேர்த்து நன்றாக கொதிக்கவிடனும். 5 நிமிசம் கழிச்சு வறுத்து பொடி செய்த கலவை, மிளகாய்த்தூள், பெருங்காயம் சேர்த்து உப்பிட்டு சுருள வதக்கி எண்ணெய் தெளிய வந்ததும் இறக்கனும். எண்ணெய் கூட சேர்த்தாலும் தப்பில்லை.

புளி ஓவராக புளிப்பாக இருந்தால் சிறிது வெல்லம் சேர்க்கலாம்.

சுவையான சூடான பூண்டு குழம்பு தயார் இதை சூடான சாதத்தில் பிசைந்து சாப்பிட வாய்வு தொல்லைகள் வயிற்று பொருமல் போன்றவை நீங்கும். இதை சப்பாத்தி, இட்லி, தோசை போன்ற வற்றிற்கும் சைட்டிஷ்ஷாக பயன்படுத்தி கொள்ளலாம்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com