ரெசிபி கார்னர்
சக்தி கொடுக்கும் வெண் பூசனிக்காய் ஜூஸ்
தேவையான பொருட்கள் :
வெண் பூசணிக்காய் - 350 கிராம்
இந்து உப்பு - 1சிட்டிகை
கருவேப்பிலை - 1 கொத்து
தேன் அல்லது நாட்டு சக்கரை - தேவைக்கு
தண்ணீர் - 1/2 லிட்டர்
செய்முறை :
பூசணிக்காயை தோல் சீவி நடுவில் உள்ள விதை பகுதியை வெட்டி எடுத்து விட்டு சிறிய துண்டுகளாக வெட்டி மிக்ஸி ஜாரில் போட்டு அத்துடன் உப்பு கருவேப்பிலை போட்டு தண்ணீர் ஊற்றி நன்கு அடித்து எடுத்து சல்லடையில் அரித்து கண்ணாடி கிளஸில் ஊற்றி தேன் அல்லது நாட்டு சக்கரை போட்டு ஸ்பூன் வைத்து நன்கு கலந்து குடிக்கவும். அடிக்கிற வெயிலுக்கு உடலுக்கு இதமாக இருக்கும்.
இனிப்பு வேண்டாம் என்றால் தேனுக்கு பதில் உப்பு சேர்த்து குடிக்கலாம்.