இரண்டே நிமிடங்களில் தயார் செய்ய... ஆந்திரா ஸ்டைல் காரசார தக்காளி சட்னி!

இரண்டே நிமிடங்களில் தயார் செய்ய...
ஆந்திரா ஸ்டைல் காரசார தக்காளி சட்னி!

தேவை: தக்காளி 4, பெரிய வெங்காயம் 1, சிவப்பு மிளகாய் 7, தோல் நீக்கிய இஞ்சி 1" அளவு, உரித்த பூண்டுப் பல் 5, கொத்தமல்லி இலை, புதினா இலை தலா ஒரு கைப்பிடி, எண்ணெய் 1½ டேபிள் ஸ்பூன், புளி நெல்லிக்காய் அளவு, கடுகு 1 டீஸ்பூன், உழுத்தம் பருப்பு 1 டீஸ்பூன், கறிவேப்பிலை 1 இணுக்கு, உப்பு தேவைக்கேற்ப.

செய்முறை: தக்காளி, வெங்காயத்தை நறுக்கிக் கொள்ளவும். கடாயில் 1 டேபிள்ஸ்பூன் எண்ணெய் ஊற்றி சூடாக்கவும். அதில் வெட்டிய தக்காளிப் பழங்களை போடவும். பின் 5 மிளகாய் வற்றல், இஞ்சி, பூண்டு, புளி, புதினா, மல்லி இலைகள், வெங்காயம், உப்பு சேர்த்து தக்காளி மிருதுவாகும் வரை வதக்கவும். பின் இறக்கி வைத்து, நன்கு ஆறியதும் மிக்ஸியில் போட்டு பேஸ்டா அரைக்கவும். கடாயில் அரை டேபிள்ஸ்பூன் எண்ணெய் விட்டு சூடாக்கி கடுகு, உளுத்தம் பருப்பு, கறிவேப்பிலையுடன் இரண்டு காய்ந்த மிளகாய் கிள்ளி போட்டு தாளித்து அதில் அரைத்த சட்னியை கொட்டி நன்கு கிளறவும். ஒரு நிமிடம் கழித்து இறக்கி வைக்கவும்.

இட்லி தோசைக்கு தொட்டுக்க சுவையான காரசார தக்காளி சட்னி தயார்!

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com