பூரி மசாலா, சுண்டல், கேசரி!

பூரி மசாலா, சுண்டல், கேசரி!

தேவையான பொருட்கள்: 

கோதுமை மாவு- 1கப்

மைதா- 1டேபிள் ஸ்பூன் 

ரவா-1ஒரு டேபிள் ஸ்பூன்

வாழைப்பழம் -1

செய்முறை:

வாழைப்பழத்தினை நன்கு மசித்து அதனுடன் மற்ற மாவுகளை சேர்த்து பூரி மாவு பதத்திற்கு நன்கு பிசையவும். சிறு சிறு உருண்டைகளாக்கி, பூரிக்கட்டையில் எண்ணெய் தொட்டு  வட்டமாக தேய்த்து எண்ணெயில் பொரித்தெடுக்கவும். பூரி ரெடி.

பூரி மாவில் உப்பு போடாமல் இருந்தால் எண்ணெய் அதிகம் குடிக்காது. 

மசாலா சுண்டல்:

வேகவைத்த கருப்பு சுண்டல்-250கிராம்

மல்லி விதை, மிளகு ,சீரகம்  மூன்றையும் வறுத்து பொடித்த பொடி-1 டேபிள் ஸ்பூன்

மிளகாய் பொடி -ஒரு டீஸ்பூன்

சாம்பார் பொடி-1 டேபிள் ஸ்பூன்

தேங்காய்த் துருவல் பொடித்தது -ஒரு டேபிள் ஸ்பூன் 

புளி கரைசல்- கால் கப்

நசுக்கிய இஞ்சி-1 டீஸ்பூன்

பெருங்காயம்- சிறிதளவு

கறிவேப்பிலை- ஒரு ஆர்க்கு 

கடுகு-தாளிக்க

எண்ணெய், உப்பு -தேவைக்கு

செய்முறை :

ரு கடாயில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் கடுகு தாளித்து, கறிவேப்பிலை, இஞ்சி சேர்த்து வதக்கி பெருங்காயம் சேர்த்து மிளகாய் பொடி போடவும். பின்னர் புளிக்கரைசலை ஊற்றி  அதில் மற்ற மசாலாக்களை கலந்து உப்பு ப் போட்டு நன்கு கொதிக்க விடவும். பிறகு  வேக வைத்திருக்கும் சுண்டலை அதில் கொட்டி நன்றாக பிரட்டி மசாலா அதில் நன்கு சேர்ந்தும் இருக்க வேண்டும். உதிராகவும் தெரிய வேண்டும். அந்த பக்குவத்தில் கீழே இறக்கி வைக்கவும். 

கேசரி:

தேவையான பொருட்கள்:

வறுத்த வெள்ளை ரவா -1 ஒரு கப் சர்க்கரை - ஒரு கப் 

நெய்- 4 டேபிள் ஸ்பூன் 

முந்திரி, பாதாம் பொடித்தது - இரண்டு டேபிள் ஸ்பூன் 

ஏலப்பொடி -அரை டீஸ்பூன்

உப்பு- ஒரு சிட்டிகை

செய்முறை:

அடி கனமான பாத்திரத்தில் இரண்டரை கப் தண்ணீர் விட்டு நன்கு கொதிக்க விடவும். பிறகு ரவையை அதில் சேர்த்து நன்கு வேக விடவும். பின்னர் ஜீனி, பொடித்த  பாதாம்  முந்திரி, ஏலப்பொடி மற்றும் உப்பு, நெய் சேர்த்து நன்றாக கிளறி இறக்கவும். 

நவராத்திரிக்கு வீட்டுக்கு வரும் விருந்தினர்களுக்கு, ஒரு தொண்ணையில் பூரி வைத்து அதன் மீது சுண்டல் மற்றும் இந்த கேசரியை வைத்து பரிமாறினால் மிகவும் விரும்பி உண்பர்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com