எது மீந்து போன சாதத்தில் புளியோதரையா? வெறும் 5 நிமிடம் போதும்!

புளியோதரை
புளியோதரைIntel

சமையல் என்பது ஒரு பெரிய கலை தான். ஆண்களோ, பெண்களோ சமையல் செய்பவர்களுக்கு தினசரி இருக்கும் ஒரு பெரிய தலைவலி, என்ன சமைப்பது என்று தான். அதிலும் பெரிய கவலை சாப்பாடு மீந்து போனால் என்ன செய்வதென்று தான். கிராமங்களில் சாதம் மீந்து போனால் மாடுகளுக்கு கொடுப்பார்கள். இன்னும் சிலர் சாதத்தை அரைத்து வடகம் செய்வார்கள்.

இதையெல்லாம் விடுங்க ஈஸியான வழி பழைய கஞ்சி தான். இப்படி சாப்பட்டை பலரும் பலவிதமாக மாற்றினாலும், புதுசா என்ன செய்யலாம் என யோசிப்பவர்களுக்கு இதோ வழி..

புளியோதரை பலருக்கும் ஃபேவரிட் தான். கோயிலுக்கு பலரும் செல்வதே புளியோதரைக்காக தான் என்று கூட சொல்வார்கள். அந்த அளவிற்கு புளியோதரை ஒரு சூப்பர் டிஷ். ஒரு வாரம் ஆனாலும் கெடாமல் இருக்கும் உணவு புளியோதரை தான். அப்படிப்பட்ட புளியோதரையை பழைய சோறு மூலம் எப்படி செய்யலாம் என்று பார்க்கலாம்.

தேவையான பொருட்கள்:

பழைய சோறு - 1 கப்

புளி கரைச்சல் - தேவையான அளவு

காய்ந்த மிளகாய் - 4

மஞ்சள் தூள் - 1 டீஸ்பூன்

பெரிய வெங்காயம் - 1

கருவேப்பிலை - தேவையான அளவு

வேர்க்கடலை - 1 கப்

கடுகு - 1 டீஸ்பூன்

நல்லெண்ணெய் - 2 ஸ்பூன்

உப்பு - தேவையான அளவு

செய்முறை:

முதல் நாள் இரவு சாதம் முங்கும் அளவிற்கு புளிக்கரைச்சல், மஞ்சள் தூள் சேர்த்து கிளறி வைத்து கொள்ளவும். இந்த சாதம் மறு நாள் நன்றாக புளிக்கரைச்சல் மிக்ஸ் ஆகி ஒரு நல்ல பதத்தில் இருக்கும்.

தொடர்ந்து ஒரு வானலியில் எண்ணெய் ஊற்றி கடுகு போடவும், கடுகு பொறிந்த பிறகு கருவேப்பிலை, காய்ந்த மிளகாய் சேர்க்கவும். இதையடுத்து அதில் வேர்க்கடலை சேர்ந்து நன்கு வதக்கவும்.

பிறகு நறுக்கி வைத்த 1 பெரிய சைஸ் வெங்காயத்தை போட்டு நன்கு வதக்கவும். வெங்காயம் பொன்னிறம் ஆன பிறகு ரெடி செய்து வைத்திருந்த பழைய சாதத்தை போட்டு கிளறவும், பின்பு தேவையான உப்பை சேர்ந்து இறக்கி விடலாம். இப்போது சூடான பழைய சோறு புளியோதரை ரெடி. இதனுடன் நீங்கள் அப்பளம் பொறித்து சாப்பிட்டாலே போது. அவ்வளவு சூப்பராக இருக்கும்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com