பனீரின் நன்மைகள் :அசத்தலான பனீர் குருமா!

panner kurma
panner kurma

பாலாடைக்கட்டி என்ற பனீர் இந்த பெயரை கேட்டதும் நம் நாவின் சுவை மொட்டுகளை மலரச் செய்யும்....சைவ பிரியர்களின் வரபிரசாதம் என்று சொல்லலாம்.....பிரியாணி முதல் கீர் மற்றும் இனிப்பு வகைகள் வரை பனீர் கொண்டு பலவிதமாக சமைக்கலாம்...சுவை மட்டுமின்றி நற்பலன்களும் நிறைந்தது....

பனீரின் நன்மைகள் குறித்து ...

  • பனீரில்  செலினியம், பொட்டாசியம் போன்ற சத்துக்கள் நிறைந்துள்ளன. இது மன மற்றும் உடல் ஆரோக்கியத்திற்கு உதவுகிறது.

  • நினைவாற்றல் இழப்பை கட்டுப்படுத்த இதிலுள்ள பொட்டாசியம் உதவுகிறது. 

  • செலினியம் கருவுறாமை பிரச்சினைகளை சரி செய்ய உதவுகிறது. 

  • இதில் கால்சியம் அதிகளவு காணப்படுவதால் இது பற்கள் மட்டும் எலும்புகளை வலுப்படுத்த உதவுகிறது. 

அசத்தலான பனீர் குருமா ( Restaurant style)

தேவையான பொருட்கள்:

  • 1 கப் - பனீர்

  • 1 - வெங்காயம்

  • 1 - தக்காளி

  • 1/2 டீஸ்பூன் - இஞ்சி பூண்டு விழுது

  • 1/4 டீஸ்பூன் - கரம் மசாலா

  • 1 டீஸ்பூன் - மிளகாய் தூள்

  • 1/2 டீஸ்பூன் - மல்லித்தூள்

  • 1 டீஸ்பூன் - 🍋எலுமிச்சை சாறு

  • தேவையான அளவு - மல்லிதழை

  • தேவையான அளவு - உப்பு

  • தேவையான அளவு - எண்ணெய்

  • அரைக்க

  • 1/4 கப் - துருவிய தேங்காய்

  • 4 - முந்திரி

  • 1/4 டீஸ்பூன் - கசகசா

  • 1/2 டீஸ்பூன் - சோம்பு

  • 1 - பச்சை மிளகாய்

  • 2 - கிராம்பு

  • 1 சிறு துண்டு -பட்டை

  • ஏலக்காய்

செய்முறை:

1.முதலில் அரைப்பதற்கு கொடுத்துள்ள பொருட்களை மிக்ஸியில் போட்டு தண்ணீர் ஊற்றி நன்கு அரைத்து கொள்ள வேண்டும்.

2.பனீரை சிறிய துண்டுகளாக நறுக்கி எண்ணெயில் பொரித்து எடுத்து கொள்ளவும்.

3.பிறகு ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் எண்ணெய் ஊற்றி காய்ந்த்தும் இஞ்சி பூண்டு விழுது சேர்த்து வதக்கி, வெங்காயம் சேர்த்து பொன்னிறமாக வதக்க வேண்டும்.

4.பின் அதில் தக்காளியை சேர்த்து பச்சை வாசனை போக நன்கு வதக்கி, மிளகாய் தூள், மல்லித் தூள், கரம் மசாலா சேர்த்து 2 நிமிடம் பச்சை வாசனைப் போக வதக்கி விட வேண்டும்.

5.பின் அரைத்து வைத்துள்ள தேங்காய் விழுது, 1 கப் தண்ணீர் ஊற்றி, 5 நிமிடம் குறைவான தீயில் பச்சை வாசனை போக கொதித்ததும், தேவையான அளவு உப்பு சேர்த்து, குருமா ஓரளவு கெட்டியாக ஆரம்பிக்கும் போது, அதில் வறுத்த பனீர் துண்டுகள் கொத்தமல்லி, எலுமிச்சை சாறு சேர்த்து இறக்கவும்..

6.அருமையான குருமா தயார்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com