ரைஸ் சீஸ் பால்ஸ்!

ரைஸ் சீஸ் பால்ஸ்!

வீட்ல சாதம் இருக்கா? இதை செய்து அசத்துங்க… 

வெளியே மழை வருது. சூடா ஏதாவது சாப்பிடத் தோணுது. ஆனா வீட்டில் வடித்த சாதமும், சீஸ் கொஞ்சம் இருக்கு. என்ன செய்யலாம்? சூப்பரா ரைஸ் சீஸ் பால்ஸ் செஞ்சு அசத்துங்க. சாப்பிட்டவங்க இது எதுல செஞ்சீங்கன்னு அசந்துபோய் கேட்பாங்க…


தேவையான பொருட்கள்:
சாதம் - 2 கப் இரண்டு கப்
சீஸ் - 4 துண்டுகள்
கார்ன்ப்ளார் அல்லது மைதா - 2 டேபிள் ஸ்பூன்
பச்சை மிளகாய் - 2 (பொடியாக நறுக்கியது)
கொத்துமல்லித்தழை - பொடியாக நறுக்கியது
மிளகாய்த்தூள் - அரை டீஸ்பூன்
உப்பு -தேவைக்கு
எண்ணெய் - பொறிக்கத் தேவையான அளவு
பிரட் தூள் - தேவைக்கு 


செய்முறை:

ரு வாயகன்ற பாத்திரத்தில் சாதத்தைப் போட்டு கைகளால் நன்றாக மசித்து வையுங்கள். சீஸை துருவுங்கள்.  மசித்த சாதத்துடன் சீஸ் துருவல், மிளகாய், மல்லித்தழை, மிளகாய் தூள், உப்பு அனைத்தையும் ஒன்றாக சேர்த்து பிசைந்து (தேவைப்பட்டால் மட்டும் சிறிது நீர் தெளிக்கலாம். சாதத்தில் உள்ள நீர் போதும்) சிறு சிறு உருண்டகளாக உருட்டி  சூடான எண்ணெயில் பொரித்து எடுத்து புதினா சட்னி தக்காளி சாஸ் உடன் சாப்பிட்டால் சுவை பிரதமாதமாக இருக்கும்.
மழைக்கு ஏற்ற புதுமையான பால்ஸ் செய்து அசத்துங்க.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com