
தேவை:
சேனைக்கிழங்கு - 1/4 கிலோ
கடலைப் பருப்பு - அரை கப்
துவரம் பருப்பு - அரை கப்
உளுந்தம் பருப்பு - கால் கப்
வற மிளகாய் - 3
உப்பு, எண்ணெய் - தேவைக்கேற்ப
பெருங்காயத்தூள் - சிறிது
செய்முறை:
மூன்று பருப்புகளையும் நீரில் இரண்டு மணி நேரம் ஊற வைத்து, நீரை வடிக்கவும். பின்னர் உப்பு, வற மிளகாய் சேர்த்து கெட்டியாக அரைக்கவும்.
சேனைக்கிழங்கை தோல் நீக்கி, துருவி மாவில் சேர்க்கவும். இத்துடன் பெருங்காயத்தூள் சேர்த்து அடை மாவு பதத்தில் நீர் விட்டு கரைத்து, தோசைக்கல்லில் அடைகளாகத் தட்டி, எண்ணெய் விட்டு, இரு புறமும் வெந்ததும் எடுக்கவும். சுவையான சேனைக்கிழங்கு அடை தயார்.