சீஸ் கேரட் இட்லி
ரெசிபி கார்னர்
ஸ்டஃப்டு ஸ்வீட் கார்ன் சீஸ் கேரட் இட்லி!
தேவையான பொருட்கள்:
1.இட்லிமாவு - 1 கப்
2.காரட் - 1 சிறியது
3.உப்பு - 1/4 டீஸ்பூன்
ஸ்டஃப்பிங்கிற்கு
1.ஸ்வீட்கார்ன் - 1 டேபிள்ஸ்பூன்
2 .சீஸ் - தேவையான அளவு
3. மிளகுதூள் - 2 சிட்டிகை
4. உப்பு - 2 சிட்டிகை
செய்முறை:
1. காரட்டை சிறியதாக நறுக்கி மிக்ஸியில் சிறிது நீர் சேர்த்து அரைத்து வடிகட்டி சாறு எடுத்து கொள்ளவும்.
2.இட்லி மாவில் காரட்சாறை கலந்து கொள்ளவும்.
3.சீஸை துருவிக் கொள்ளவும்.
4.ஸ்வீட்கார்னை மிக்ஸியில் லேசாக அடித்து உப்பு, மிளகுதூள் கலந்து கொள்ளவும்.
5.இட்லி தட்டில் சிறிதளவு மாவு ஊற்றி 1 டீஸ்பூன் ஸ்வீட்கார்ன் கலவையை வைக்கவும்.
6.தேவையான அளவு துருவிய சீஸை வைக்கவும்.
7.பின்னர் மேலை சிறிதளவு இட்லிமாவை ஊற்றவும்.
8.நன்கு வேகவைத்து எடுக்கவும்.
(குழந்தைகளுக்கு விருப்பமான கிரேவியுடன் சேர்த்து சாப்பிட கொடுக்கலாம்.)