சர்க்கரை வள்ளிக்கிழங்கு போண்டா!

சர்க்கரை வள்ளிக்கிழங்கு போண்டா!

நேற்றைய மழையின்

மிச்ச மண் வாசம் நாசியை வருட.... 

இதமான தென்றல் காற்று மனதை வருட...

அம்மா செய்யற எங்க ஊர்

ஸ்பெஷலான சர்க்கரை வள்ளிக்கிழங்கு போண்டா

நினைவுக்கு வர...

இதோ சுடச்சுட சர்க்கரை

வள்ளிக்கிழங்கு போண்டா செய்முறை+போண்டா

உங்களுக்காக.....

தேவையான பொருட்கள்:

சர்க்கரை வள்ளிக்கிழங்கு 2

வறுத்து மிக்ஸியில் / அம்மியில்

பொடித்த வேர்க்கடலை மாவு 1/2கப்

அரிசி மாவு சிறிதளவு

மிளகாய்த்தூள் சிறிதளவு

பெருங்காயத்தூள் 1சிட்டிகை

உப்பு எண்ணெய் தேவையான அளவு

செய்முறை:

சர்க்கரை வள்ளிக்கிழங்கை மண்

போக கழுவி சுத்தம் செய்து தோல் சீவி துருவித் கொள்ளவும்.

1கப் துருவலுக்கு 1/4கப் வேர்க்கடலை பல்பொடி சேர்த்து

சிறிதளவு அரிசி மாவு உப்பு

மிளகாய்த்தூள் பெருங்காயத்தூள் சேர்த்து

நன்கு பிசைந்து கொள்ளவும்.

தேவையானால் சிறிது தண்ணீர்

தெளித்து பிசைந்து கொள்ளவும்.

பிசைந்த மாவை குட்டி குட்டியாக

உருட்டி காய்ந்த எண்ணெயில்

மிதமான தீயில் பொரித்தெடுக்க....

கலக்கலா சர்க்கரை வள்ளிக்கிழங்கு போண்டா ரெடி.

இதை அப்படியே சாப்பிட

சுவை அள்ளும்.

பி.கு. சர்க்கரை வள்ளிக்கிழங்குக்கு பதில்... மரவள்ளிக் கிழங்கிலும் செய்யலாம்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com