சூப்பர் சூப் வகைகள்!

சூப்பர் சூப் வகைகள்!

சுண்டைக்காய் சூப்

தேவையான பொருட்கள்:

காம்பு நீக்கிய சுண்டைக்காய் ½ கப், துவரம் பருப்பு ½ கப், பெரிய வெங்காயம் 1, தக்காளி 2, பச்சை மிளகாய் 1, பூண்டு 2 பல், தேங்காய் பால் ½ கப், நெய், மஞ்சள் தூள், உப்பு சிறிதளவு.

செய்முறை:

சுண்டைக்காயை நன்கு நசுக்கிக்கொள்ளவும். வெங்காயம் + தக்காளி மை பொடியாக நறுக்கவும். ப்ரஷர்பேனில் நெய்விட்டு காய்ந்ததும் பட்டை தாளித்து வெங்காயம் + தக்காளி + நசுக்கிய சுண்டைக்காய் + பச்சை மிளகாய் சேர்த்து நன்கு வதக்கி துவரம் பருப்பு, மஞ்சள் தூள், உப்பு 4 தம்ளர் தண்ணீர் சேர்த்து
2 விசில்விட்டு இறக்கி ஆறியதும் பச்சை மிளகாய் + பட்டை நீங்கலாக.. மற்றவற்றை மிக்ஸியில் அரைத்து வடிகட்டி, ஆறியதும் மீண்டும் ஒருமுறை நன்கு கொதிக்கவிட்டு மல்லித்தழை தூவி பரிமாறவும்.

 

கண்டதிப்பிலி சூப்

தேவையான பொருட்கள்:

புளி எலுமிச்சை அளவு, காய்ந்த மிளகாய் 2, மிளகு 1 டீஸ்பூன், கண்டதிப்பிலி 8 குச்சி, அரிசி திப்பிலி 10 குச்சி (இரண்டும் நாட்டு மருந்து கடைகளில் கிடைக்கும்), துவரம் பருப்பு 1 டேபிள்ஸ்பூன், பெருங்காயத்தூள் சிறிதளவு, கடுகு, கறிவேப்பிலை, உப்பு சிறிதளவு.

செய்முறை:

புளியுடன் தேவையான உப்பு சேர்த்து நீரில் கொதிக்கவிடவும். காய்ந்த மிளகாய் + கட்டிப்பிடி + அரிசி திப்பிலி + பருப்பு + பெருங்காயத்தூள் எல்லாவற்றையும் வாணலியில் வறுத்து, மிக்ஸியில் பொடித்துக்கொள்ளவும் (நைஸாக). இதை புளிக்கரைசலில் சேர்த்து மிதமான தீயில் நன்கு கொதிக்கவிட்டு இறக்கி, நெய்யில் கடுகு, கறிவேப்பிலை தாளித்து கொட்ட...கமகம கண்டதிப்பிலி சூப் ரெடி.

இப்படி விதவிதமாய் சூப்புகளை வீட்டிலேயே தயாரித்து, அருந்தி...டெங்கு காய்ச்சலை விரட்டுவோம். குளிர்காலத்தையும் கொண்டாடுவோம்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com