சுவையான பழ போளி!

Steam & Cooking Contest
Steam & Cooking Contest
கல்கி டெஸ்க்

1941 முதல் 2021 வரை வெளிவந்த கல்கி குழும அச்சுப் பதிப்புகளின் களஞ்சியத்திலிருந்து தேர்ந்தெடுக்கப்பட்டு டிஜிட்டல் வடிவில் மீள்பதிப்பிக்கப்படும் கட்டுரைகளைக் கல்கி டெஸ்க் தொகுத்து வழங்குகிறது. கல்கி குழுமத்தின் 80 ஆண்டுகால பத்திரிகை மரபில் வெளிவந்த இக்கட்டுரைகளின் அசல் உள்ளடக்கம் மாறாமல் இன்றைய வாசகர்களுக்கேற்பச் சரிபார்க்கப்பட்டு வழங்கப்படுகிறது.

Updated on

தேவையான பொருட்கள்:

வாழைப்பழம் - 2

மைதா மாவு - 100 கிராம்

வெல்லம் - 3 அச்சு

தேங்காய் துருவியது - 1 கப்

நெய் - 4 ஸ்பூன்

செய்முறை:

2 வாழைப்பழத்தை ஆவியில் வேக வைத்து நன்கு மசித்துக் கொள்ளவும்.

½ மூடி தேங்காய் துருவியதையும் , 3 அச்சு பொடி செய்த வெல்லத்தையும் ஒன்றாக சேர்த்து பிசையவும் .

பிசரிய கலவையை மைதாமாவில் பிரட்டி உருண்டைகளாக செய்யவும் .

ஒவ்வொரு உருண்டையாக வாழை இலையில் வைத்து அடை போலத் தட்டி ஓர் சட்டியில் ஆவியில் வேக வைக்கவும் .

சுடச் சுட ஆவி பறக்க பழ போளி தயார்.

-ராமாயி ராமநாதன்

logo
Kalki Online
kalkionline.com