ஸ்வீட் பொடேடோ கேரட் மிக்ஸ்ட் ஸ்பெஷல்!

ருசியாய் சுவையாய்!
ஸ்வீட் பொடேடோ கேரட் மிக்ஸ்ட் ஸ்பெஷல்!

தேவை: ஸ்வீட் பொடேடோ (சர்க்கரை வள்ளிக்கிழங்கு) – 200 கிராம், கேரட் – 150 கிராம், கோதுமை மாவு (சலித்தது) – 3 கப், ரவை – ½ கப், பால் – 1 கப், பொடித்த வெல்லம் – ½ கப், வறுத்த வேர்க்கடலைப் பொடி – 1 கப், ஏலப்பொடி – ½ டீஸ்பூன், நெய் – 1 கப், மிளகாய்ப் பொடி – ½ டீஸ்பூன், உப்பு – சிறிது, தண்ணீர் – தேவையானது.

செய்முறை:

முதலில் ஸ்வீட் பொடேடோ, கேரட் ஆகியவைகளின் தோல் சீவி கட் செய்து வேகவிட்டு எடுத்து மசித்துக் கொள்ளவும்.

* கோதுமை மாவுடன், ரவை, சிறிது உப்பு மிக்ஸ் செய்த பின் பால்விட்டு நன்கு பிசையவும். தேவைப்பட்டால் சிறிது தண்ணீர் தெளித்துக் கொள்ளவும். இதை சுமார் 15 நிமிடங்கள் மூடி வைக்கவும்.

* மசித்து வைத்திருக்கும் ஸ்வீட் பொடேடோ கேரட் கலவையுடன், பொடி செய்து வைத்திருக்கும் வேர்க்கடலை, வெல்லம், ஏலம், மிளகாய்ப் பொடி, சிறிது உப்பு சேர்த்து நன்கு மிக்ஸ் செய்துகொள்ளவும். இதை சிறு – சிறு உருண்டைகளாக உருட்டித் தனியே வைக்கவும்.

* கோதுமை மாவு ரவை கலவையை சப்பாத்திக்கு உருட்டுவது போல பெரிய எலுமிச்சை அளவில் உருட்டவும்.

* ஒவ்வொரு உருட்டலையும் பூரி மாதிரி இட்டு, நடுவே ஸ்வீட் பொடேடோ மிக்ஸ்ட் கலவை உருண்டையை வைத்து மூடி, நெய் தடவிய கைகளைக் கொண்டு சற்று பெரிதாக பரத்திக்கொள்ளவும்.

* தோசைக்கல் அல்லது சப்பாத்திக்கல்லை அடுப்பில் வைத்து சற்றே காய்ந்ததும், ஒவ்வொன்றாக போட்டு லேசாக நெய்விட்டு, பொன்னிறமானதும் திருப்பிப் போட்டு எடுத்து தட்டில் வைக்கவும். மீண்டும் அதன் மீது சிறிது நெய் தடவவும். எல்லா உருண்டைகளையும் இவ்வாறே செய்யவும்.

* மிகவும் சக்தி நிறைந்த இந்த ஸ்பெஷல் ஐட்டம் அனைவருக்கும் பிடித்ததாகும். குறிப்பாக இதன் ருசியும், சுவையும் குழந்தைகளுக்கு மிகவும் பிடித்ததொன்று. சைட் டிஷ் இல்லாமலேயே சாப்பிடலாம்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com