தஹி பைங்கன் கிரேவி!

தஹி பைங்கன் கிரேவி!

தேவை: கத்தரிக்காய் அரை கிலோ, நறுக்கிய வெங்காயம் 200 கிராம், நறுக்கிய தக்காளி கால் கிலோ, தயிர் 1½ கப், நறுக்கிய பச்சை மிளகாய் 10, நறுக்கிய இஞ்சி 15 கிராம், ஜீரகம் 1 டீஸ்பூன், இஞ்சி பூண்டு பேஸ்ட் 2 டீஸ்பூன், கரம் மசாலா பவுடர், தனியா பவுடர், மிளகாய் தூள் தலா 1டீஸ்பூன், நெய் 3 டேபிள்ஸ்பூன், பொரிக்க எண்ணெய், உப்பு தேவைக்கேற்ப.

செய்முறை: கத்தரிக்காயை பெரிய துண்டுகளாக நறுக்கி எண்ணையில் பொரித்தெடுக்கவும். கடாயை அடுப்பில் வைத்து நெய்யை ஊற்றவும். காய்ந்ததும் சீரகம் போடவும். அது வெடித்ததும் வெங்காயம் சேர்த்து வேகும்வரை வதக்கவும். பின் இஞ்சி, பச்சை மிளகாய், இஞ்சி பூண்டு பேஸ்ட் சேர்க்கவும். கோல்டன் கலர் வந்ததும் மிளகாய் தூள், தனியா தூள் சேர்த்து கலந்து, தக்காளி சேர்த்து மிருதுவாகும் வரை மிதமான தீயில்  வைத்திருக்கவும். பின் கரம் மசாலா, உப்பு சேர்க்கவும். தயிரை கடைந்து சேர்க்கவும். அரை கப் தண்ணீர் ஊற்றி சில நிமிடங்கள்கொதிக்க விடவும். நெய் பிரிந்து வரும்போது பொரித்து வைத்த கத்திரிக்காயை சேர்க்கவும். மிதமான தீயில் 15 நிமிடம் வேகவைத்து இறக்கவும். மல்லித்தழை கிள்ளிப் போட்டு அலங்கரிக்கவும்.

சுவையான தஹி பைங்கன் கிரேவி, சாதத்துடன் பிசைந்து சாப்பிடவும், சைட் டிஷ்ஷாக தொட்டுக்கவும், ரெடி.

கத்திரிக்காய் ரசம்.

தேவை: கத்திரிக்காய் 4, தக்காளி 2, பூண்டு 6 பல், மிளகுத்தூள் 1டீஸ்பூன், சீரகத்தூள் ¾ டீஸ்பூன், கடுகு ¾ டீஸ்பூன், சிவப்பு மிளகாய் 2, ஒரு சிட்டிகை பெருங்காயத்

தூள் & மஞ்சள் தூள், கறிவேப்பிலை கொத்தமல்லி இலைகள் சிறிது, ஒரு கைப்பிடி அளவு துவரம் பருப்பு, எண்ணெய் & உப்பு தேவையான அளவு, புளி கரைசல் கால் கப்.

செய்முறை: துவரம் பருப்பை குக்கரில் குழைய வேகவைத்து எடுக்கவும். கத்தரிக்காய் தக்காளி இரண்டையும் நான்கு நான்கு துண்டாக வெட்டி ஒரு பாத்திரத்தில் போட்டு கறிவேப்பிலை மஞ்சள் தூள், தண்ணீர் சேர்த்து வேக வைக்கவும். காய் வெந்தவுடன், மிளகுத்தூள், சீரகத்தூள், பூண்டு, உப்பு தேவையான அளவு போடவும். பின் பருப்பை கையால் நன்கு கரைத்து காயுடன் சேர்க்கவும். கொதிநிலை வரும்போது புளிக் கரைசலையும் அதில் சேர்க்கவும். ரசம் மாதிரி நீர்க்க இருக்கும்படி தேவைப்படும் தண்ணீர் ஊற்றி, ரசம் நன்கு நுரைத்து பொங்கி வரும்போது, தாளிப்பு கரண்டியில் ரெண்டு ஸ்பூன் எண்ணெய் ஊற்றி கடுகு மிளகாய் வற்றல், பெருங்காயம் தாளித்து ரசத்தில் கொட்டி இறக்கவும். மல்லித் தழைகளை கிள்ளிப்போடவும். சாதத்தில் ஊற்றி சாப்பிட சூடான சுவையான சத்து நிறைந்த கத்திரிக்காய் ரசம் தயார்!

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com