மொறு மொறு வென முட்டைகோஸ் போண்டா செய்யலாமா...!

மொறு மொறு வென முட்டைகோஸ் போண்டா செய்யலாமா...!

முட்டைகோஸ் போண்டா செய்ய தேவையான பொருட்கள்:

இந்த முட்டைகோஸ் போண்டா செய்வதற்கு முதலில் துருவிய முட்டைகோஸ் ஒருகப் எடுத்துக் கொள்ளவும்.

அடுத்து ஒரு உருளைக்கிழங்கை தோல் சீவி அதையும் துருவி எடுத்துக் கொள்ளவும்.

அத்துடன் இரண்டு பச்சை, ஒருகைப்பிடி கருவேப்பிலை, கொத்தமல்லி இவை அனைத்தையும் பொடியாக நறுக்கிவைத்துக் கொள்ளவும்.

ஒரு பெரிய வெங்காயத்தையும் நீளமாக நறுக்கி வைத்துக் கொள்ளவும்.

முட்டைகோஸ் போண்டா செய்முறை :

இப்போது ஒரு பவுலில் இந்த காய்கறிகளை எல்லாம் மொத்தமாக சேர்த்த பிறகு, கால் கப் கடலை மாவு, கால் கப் அரிசி மாவு, ஒரு டீஸ்பூன் உப்பு இவை அனைத்தையும் சேர்த்த பிறகு தண்ணீர் ஊற்றாமல் ஒரு முறை இவையெல்லாம் நன்றாக கலந்து கொள்ளவும்.

அதன் பிறகு கொஞ்சம் கொஞ்சமாக லேசாக தண்ணீர் தெளித்து இந்த மாவை பக்கோடா போடும் பதத்துக்கு பிசைந்து கொள்ளவும்.

அடுத்து மாவை சின்ன சின்ன உருண்டைகளாக உருட்டி ஒரு தட்டில் அடுக்கி வைத்துக் கொள்ளவும்.

அதன் பிறகு அடுப்பை பற்ற வைத்து கடாய் எண்ணெய் ஊற்றி சூடானவுடன் அடுப்பை மிதமான தீக்கு மாற்றிய பிறகு உருட்டி வைத்த போண்டாக்களை ஒவ்வொன்றாக போட்டு நன்றாக சிவந்து வந்தவுடன் எடுத்து கொள்ளவும்.

சுவையான முட்டைகோஸ் உருளைக்கிழங்கு போண்டா தயாராகி விட்டது. இதற்கு தொட்டுக் கொள்ள சாஸ் , தேங்காய் சட்னி போன்றவை நல்ல காம்போ.

குழந்தைகளுக்கு சுவையான சத்து மிகுந்த எளிய மாலை நேர சிற்றுண்டி முட்டைகோஸ் போண்டா..!

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com