
தினமும் வீட்டில் தயிர் வாங்குபவர்கள் அதிகம். அதிலும் குறிப்பாக ஊர் கிராமங்களில் பாலை உரை ஊற்றி வைத்து தயிர் எடுப்பார்கள். அப்படி தயிர் மீந்தாலோ புளித்தாலோ கீழே தான் ஊற்றுவார்கள். இனி அதில் பல வகையான உணவுகளை செய்து அசத்தலாம். இனி தயிர் மீந்து விட்டது என கவலை வேண்டாம். ஸ்னேக்ஸ், டிபன் என அனைத்திற்கும் பயன்படுத்தலாம் வாங்க தெரிஞ்சுக்கலாம். பொதுவாகவே தயிர் ஒரு நல்ல உணவு. செரிமான கோளாறுகள் உள்ளவர்கள் இதை தினமும் சாப்பிடலாம்.
தயிர் பான்கேக்
தயிர் பான்கேக்குகள் உங்கள் செரிமான அமைப்பை மேம்படுத்த சிறந்த காலை உணவுகளில் ஒன்றாகும். இது எலும்புகளை வலுபடுத்தவும் இதய ஆரோக்கியத்தை சீராக்கவும் உதவுகிறது.
தயிர் வடை
பருப்பு மற்றும் தயிர் ஆகியவற்றிலிருந்து தயாரிக்கப்படும் தயிர் வடையில் ஊட்டச்சத்துக்கள் நிரம்பியுள்ளது. இது புரதம், கால்சியம், வைட்டமின் பி-12, மெக்னீசியம் மற்றும் பொட்டாசியம் ஆகியவற்றின் சிறந்த மூலமாகும்,
தயிர் சாண்ட்விச்
தயிர் சாண்ட்விச்சின் முக்கிய மூலப்பொருள் தயிர் தான். இதில் அதிக கால்சியம் உள்ளது. நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும், செரிமானத்திற்கு உதவும்.
தயிர் ஸ்மூத்திஸ்
தயிர் ஸ்மூத்திகள் சிறந்த காலை உணவாகும். பருவகால பழங்கள், தேன் மற்றும் சில நட்ஸ்களுடன் சேர்ந்து தயாரிக்கலாம்.