டிப்ஸோ டிப்ஸ்!

அன்றாட சமையலில் ருசி அதிகரிக்க நாம் செய்ய வேண்டியது!
சமையல் டிப்ஸ்
சமையல் டிப்ஸ்
Published on

இந்திராணி தங்கவேல், மாடம்பாக்கம்

 பருப்பை வறுத்து தூளாக்கி சேர்த்தாலும் உருளைக்கிழங்கை வேக வைத்து சேர்த்தாலும் அடை சுவையாக இருக்கும். 

 புளி கரைக்கும் போது சிறிது வெல்லம் சேர்த்தால் ரசத்தின் ருசி அதிகரிக்கும். 

 சப்பாத்தி மாவை பால் கலந்த நீரால் பிசைந்தால் சப்பாத்தி சுவையாக இருக்கும். 

 சப்பாத்தி மாவு பிசைந்து அரை மணி நேரம் ஈரத்துணியால் மூடி வைத்து சப்பாத்தி செய்தால் ருசிக்கும். 

சப்பாத்தி மாவு
சப்பாத்தி மாவு

கோதுமை மாவுடன் சிறுதானியமாவு வகைகளை சேர்த்து சிறிது ஏலக்காய், சுக்கு தூள் கலந்து பிசைந்து ரொட்டி செய்தால் சுவையுடன் எளிதில் ஜீரணமாகும். 

 கார வகைகளை கடலை எண்ணெய் அல்லது தேங்காய் எண்ணெயில் செய்தால் ருசியாக இருப்பதுடன் சீக்கிரம் கெட்டும் போகாது. 

 சோறு சமைக்கும்போது அரை ஸ்பூன் உப்பு, ஒரு ஸ்பூன் எலுமிச்சை சாறு, ஒரு ஸ்பூன் நெய் சேர்த்தால் ருசி தூக்கும். 

 சிறிது தேங்காய் சேர்த்தால் ஆம்லெட் ருசிக்கும். 

 சப்பாத்தி மாவில் சிறிது மோர், மிளகு ,சீரகத்தூள், மல்லித்தழை சேர்த்தால் ருசி கூடும். 

 வெஜிடபிள் கட்லெட் செய்யும் போது சிறிது தேங்காய் சேர்த்தால் சுவை அதிகமாகும். 

சர்க்கரைக்கு பதில் வெல்லம் அல்லது தேன் சேர்த்தால் க்ரீன் டீ வகைகள் மற்றும் இனிப்புகள் கூடுதல் ருசியாக இருக்கும். 

 முட்டைக்கோஸில் சிறிது இஞ்சி சேர்த்தால் சுவை அதிகரிக்கும். 

 வாய்க்கு ருசி தெரியவில்லை என்றால் ,நார்த்தங்காயை மென்று துப்பினால் ருசி தெரிய வரும். 

 மாவுடன் சிறிது பேரீச்சம்பழம் சேர்த்தால் அதிரசம் , அப்பம் போன்றவை ருசிக்கும். 

 உப்புமா கிளறி இறக்கும் முன் கொஞ்சம் கெட்டி தயிர் சேர்த்துக் கிளறினால் ருசி சூப்பரா இருக்கும். 

 சிறுதானிய பொங்கல் செய்யும் போது வேர்க்கடலை தாளிதம்  செய்தால் சுவையாக இருக்கும். 

பொங்கல்
பொங்கல்

இளம் கருவேப்பிலையில் தான் மனம் அதிகமாக வரும். 

 நெய்யை முறிக்க முற்றிய முருங்கை இலை ருசியுடன் வாசனையைக் கூட்டும். 

 சிறிது பச்சரிசி மாவு சேர்த்து பக்கோடா, முறுக்கு செய்தால் ருசியாக இருக்கும். 

 கடலை மாவுடன் பாதி அளவு பார்லி மாவு சேர்த்தால் பக்கோடா ருசிக்கும். 

 வனஸ்பதியில் மிச்சர் செய்தால் மொறுமொறுப்பாக நல்ல மணத்துடன் ருசியாக இருக்கும். 

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com