திருநெல்வேலி ஸ்பெஷல் தேங்காய் திரட்டுப் பால்!

திருநெல்வேலி ஸ்பெஷல் தேங்காய் திரட்டுப் பால்!

திருநெல்வேலி பக்கம் எந்த விசேஷமாக இருந்தாலும் திரட்டுப் பால் போல தேங்காய் திரட்டுப்பாலும் செய்து சபையில் வைக்க வேண்டும். செய்வது மிகவும் எளிது. அத்துடன் ரொம்பவும் ருசியானதும் கூட.

தேங்காய் திரட்டுப் பால் செய்முறை:

தேங்காய் துருவல் ஒரு கப் 

வெல்லம் முக்கால் கப் 

ஏலப்பொடி ஒரு ஸ்பூன்

அரிசி மாவு 2 ஸ்பூன் 

முந்திரி பருப்பு 10 

தேங்காய் பல் 2 ஸ்பூன்

நெய் 2 ஸ்பூன்

தேங்காய் பிரஷ்ஷாக இருந்தால் ருசியாக இருக்கும். எனவே ஒரு தேங்காயை உடைத்து துருவிக் கொள்ளவும். ஒரு கப் துருவலுக்கு முக்கால் கப் வெல்லம் சரியாக இருக்கும். மிக்ஸியில் தேங்காய் துருவல் வெல்லம் பொடித்தது அரிசி மாவு மூன்றையும் சேர்த்து ஸ்ரீ தரும் தண்ணீர் விட்டு நைசாக அரைத்துக் கொள்ளவும்.

வாணலியில் இரண்டு ஸ்பூன் நெய் விட்டு உடைத்த முந்திரிப் பருப்பு, பொடியாக நறுக்கிய தேங்காய் பால் இரண்டு ஸ்பூன் ஆகியவற்றை சேர்த்து சிவக்க வறுத்து எடுத்து வைக்கவும். அதே வாணலியில் அரைத்து வைத்துள்ள தேங்காய் பேஸ்ட்டை சேர்த்து அடுப்பை நிதானமாக வைத்து ஐந்து நிமிடம் போல்  கிளறவும். அல்வா பதம் வந்ததும் ஏலப்பொடி 1 ஸ்பூன், வறுத்த முந்திரிப்பருப்பு, தேங்காய்ப் பல் ஆகியவற்றை சேர்த்து கிளறி இறக்கவும். சுவையான, ருசியான தேங்காய் திரட்டுப் பால் தயார்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com