தக்காளி கொத்சு
தக்காளி கொத்சு

தக்காளி கொத்சு!

தேவையான பொருட்கள்:

நன்கு பழுத்த தக்காளி - 6
முந்திரிபருப்பு - 10
மிளகாய் தூள் - 1 மேஜைக்கரண்டி
மஞ்சள் தூள் - 1/2 தேக்கரண்டி
உப்பு - தேவையான அளவு
தேங்காய் துருவல் - 1/2 கப்
எண்ணெய் - 1 மேஜைக்கரண்டி
கடுகு - 1 தேக்கரண்டி
பெரிய வெங்காயம் - 1
இஞ்சி பூண்டு விழுது - 1 தேக்கரண்டி
கறிவேப்பிலை - சிறிது

செய்முறை:

பெரிய வெங்காயத்தை பொடிதாக நறுக்கி வைக்கவும்.

முந்திரிப்பருப்பு,தேங்காய்துருவல் சேர்த்து நன்கு அரைத்து கொள்ளவும்.

ஒரு பாத்திரத்தில் தக்காளி மூழ்கும் அளவுக்கு தண்ணீர் ஊற்றி கொதித்ததும் அடுப்பை அணைத்து 5 நிமிடம் வரை மூடி வைக்கவும்.

நன்கு ஆறியபின் தக்காளியை தோலுரித்து மிக்சியில் நன்றாக அரைத்துக்கொள்ளவும்.

வாணலியில் எண்ணெய் ஊற்றி சூடானதும் கடுகு கறிவேப்பிலை தாளிக்கவும்.

பின்னர் வெங்காயம் சேர்த்து பொன்னிறமாக வதக்கவும்.

இஞ்சி பூண்டு விழுது சேர்த்து நன்கு வதக்கி மிளகாய் தூள், மஞ்சள் தூள் சேர்த்து கிளறவும்.

பின்னர் அதனுடன் அரைத்து வைத்துள்ள தக்காளி, மற்றும் உப்பு சேர்த்து 10 நிமிடம் வரை கொதிக்க விடவும்.

பின்னர் தேங்காய்,முந்திரி விழுது சேர்க்கவும். கொத்சு கெட்டியானதும் அடுப்பை அணைக்கவும்.

சுவையான தக்காளி கொத்சு தயார் . சாம்பார் , பருப்பு சாதம் மற்றும் இட்லி, தோசை, பூரி, சப்பாத்தியுடன் சேர்த்து சாப்பிட நன்றாக இருக்கும்...

Other Articles

No stories found.
Kalki Online
kalkionline.com