
தேவையான பொருட்கள்:
பச்சைப் பயறு - 2 கப்
வர மிளகாய் - 2
கறிவேப்பிலை - சிறிது
மிளகு
சீரகம் - தலா அரை ஸ்பூன்
உப்பு - தேவைக்கேற்ப
மஞ்சள் தூள் - 1 சிட்டிகை
எலுமிச்சம்பழச் சாறு - 1 ஸ்பூன்
நெய் - சிறிதளவு
எண்ணெய்- வறுப்பதற்கு
செய்முறை:
பச்சைப் பயிரை இரண்டு மணி நேரம் தண்ணீரில் ஊற வைக்கவும். மிளகாய், கருவேப்பிலை, மிளகு, சீரகம் இவற்றை சிறிது நெய் விட்டு வறுத்துப் பொடிக்கவும். அதனுடன் உப்பு, மஞ்சள் தூள் கலந்து, எலுமிச்சம் பழச்சாறு சேர்க்கவும்.
ஊற வைத்த பச்சைப் பயறை பிழிந்து, ஈரம் போக காய விடவும் வாணலியில் எண்ணெய் விட்டு காய்ந்ததும், பயறு சேர்த்து வறுத்து எடுத்து, தயாராக உள்ள பொடியை போட்டு கலந்து, குலுக்கி எடுத்து வைக்கவும். சுவையான சத்தான ஸ்நாக்ஸ் இது..