மூவர்ண புட்டு!

மூவர்ண புட்டு!

தேவையான பொருட்கள்:

  • 1 1/2 கப் - பச்சரிசி மாவு

  • 1 - நடுத்தரமான காரட் 

  • கைப்பிடி அளவு - மல்லிதழை

  • 1/2 கப் - தேங்காய் துருவல்

  • தேவையான அளவு - உப்பு

செய்முறை:

1. மாவை மூன்று பங்காக பிரித்து உப்பு சேர்த்து பிரட்டி கொள்ளவும்.

2.காரட்டை துருவி உப்பு சேர்த்து சாறு எடுத்து வடிகட்டி கொள்ளவும்.

3.மல்லிதழையை சிறிதளவு நீர்,உப்பு சேர்த்து சாறு எடுத்து வடிகட்டி கொள்ளவும்.

4.ஒரு பங்கு மாவில் காரட் சாறு சேர்த்து பிரட்டி கொள்ளவும்.

5.ஒரு பங்கு மாவில் மல்லிஇலை சாறு சேர்த்து பிரட்டி கொள்ளவும்.

6.இன்னொரு பங்கு மாவில் தண்ணீர் தெளித்து பிரட்டி கொள்ளவும்.

7.புட்டு குழலில் முதலில் 2 டீஸ்பூன் தேங்காய் துருவல் வைக்கவும் பின்னர் காரட் சாறு கலந்த மாவை சேர்க்கவும்.

8.பின்னர் தேங்காய் துருவல் 2 டீஸ்பூன் சேர்க்கவும். பின்னர் தண்ணீர் சேர்த்து பிரட்டிய மாவை சேர்க்கவும்.

9.பின்னர் தேங்காய் துருவல் 2 டீஸ்பூன் சேர்த்து மல்லிஇலை சாறு சேர்த்து மாவு பின்னர் தேங்காய் துருவல் சேர்த்து மூடி வேக வைத்து பரிமாறவும்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com