வீட்டிலேயே இந்த பன் தயாரித்து சாப்பிட்டுப் பாருங்கள்!

Try making this bun at home.
Try making this bun at home.

ந்தியாவைப் பொறுத்தவரை நம்ம ஊர் டீக்கடைகளிலும், பேக்கரிகளிலும் பன்களை விரும்பி சாப்பிடுபவர்கள் அதிகம். இதுவரை சுவையான பன்கள் சாப்பிட வேறு கடைகளுக்கு மட்டுமே சென்று வந்த நிலையில், அதே சுவையில் ஓவன் இல்லாமல் நம்முடைய வீட்டிலேயே பன்களை எளிதாக செய்யலாம். 

பொதுவாகவே இந்த வகை பன்களை குழந்தைகள் விரும்பி சாப்பிடுவார்கள். அதுவும் நம்முடைய அம்மாக்கள் கையால் செய்தால் சொல்லவா வேண்டும். அது மிகப்பெரிய சந்தோஷத்தை அவர்களுக்குக் கொடுக்கும். நீங்களும் உங்களுடைய குழந்தைகளுக்கு உங்கள் கையாலேயே பன் செய்துத்தர வேண்டுமென்றால் இந்தப் பதிவை முழுமையாகப் படிக்கவும்.  

தேவையான பொருட்கள்: 

முட்டை - 1

பால் - 200 ml

வெண்ணெய் - 2 ஸ்பூன்

ஈஸ்ட் - அரை ஸ்பூன்

சர்க்கரை - ஒரு ஸ்பூன்

மைதா - அரை கிலோ

உப்பு - சிறிதளவு

ஒரு சிறிய பாத்திரத்தில் முதலில் ஈஸ்டை சேர்த்து, தண்ணீர் விட்டு நன்றாகக் கரைத்துக் கொள்ளவும். பின்னர் அதிலேயே சர்க்கரை, உப்பு சேர்த்து நன்றாகக் கரைக்கவும். அதன் பிறகு அதில் ஒரு முட்டையை உடைத்து ஊற்றி அடித்துக் கலக்கவும். இந்த கலவையிலேயே பால் சேர்க்க வேண்டும். 

பின்னர் இந்தக் கலவையில் மைதா மாவு சேர்த்து சப்பாத்தி பாதத்திற்கு நன்றாகப் பிசையவும். பின்னர் அரை மணி நேரம் மூடி போட்டு ஊற விடவும். அரை மணி நேரம் கழித்து பிசைந்த மாவு நன்றாக உப்பி வந்திருக்கும். அந்த மாவை மீண்டும் ஒருமுறை சப்பாத்தி பாதத்திற்கு பிசைந்து கொள்ளுங்கள். பின்னர் அதை சிறிய சிறிய உருண்டைகளாக உருட்டி எடுத்துக்கொள்ளவும். 

உருட்டிய உருண்டைகளை ஒரு தட்டில் சிறிதளவு வெண்ணை தடவி வரிசையாக கொஞ்சம் இடைவெளி விட்டு அடுக்கிக்கொள்ள வேண்டும். அடுத்ததாக அடுப்பில் ஒரு கடினமான பாத்திரத்தைவைத்து அதன் உள்ளே சிறிய ஸ்டாண்ட் வைத்து, 10 நிமிடம் சூடு செய்ய வேண்டும். பின்னர் தயார் செய்து வைத்துள்ள உருண்டைகளை எடுத்து பாத்திரத்தில் உள்ளே வைத்து சூடு வெளியே போகாதபடி 30 நிமிடங்கள் மூடி போட்டு வேக விடவும். 

30 நிமிடம் கழித்து திறந்து பார்த்தால் சுவையான பேக்கரி பன் தயார். அதன் மேல் கொஞ்சம் வெண்ணெய் தடவி சூடு ஆறியதும் குழந்தைகளுக்கு சாப்பிட கொடுக்கலாம். 

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com