வாழைப்பூ வடை
வாழைப்பூ வடை

வாழைப்பூ வடை!

தேவையானவை :

1.கடலைப் பருப்பு – 1 கப், 2.வாழைப்பூ – 1/2 கப்,

3.வெங்காயம் -1

4.சோம்பு – 1 தேக்கரண்டி,

5.பூண்டு – 6 பல்

6.வற்றல் தூள் - 1/2 ஸ்பூன்

7. கறிவேப்பிலை – சிறிதளவு,

8.உப்பு – தேவைக்கேற்ப 9.எண்ணெய் – தேவையான அளவு.

10 . மல்லிதழை - சிறிதளவு

11. இஞ்சி - சிறுதுண்டு

செய்முறை :

1.கடலைப் பருப்பை 2 மணிநேரம் ஊறவைக்கவும். அதன் பின் கடலைப் பருப்புடன் பூண்டு, இஞ்சி,சோம்பு, ஆகியவற்றைத் தண்ணீரில்லாமல் துறுதுறுவென அரைத்து அதை ஒரு பாத்திரத்தில் எடுத்துக் கொள்ளவும்.

2.அதில் வேகவைத்த வாழைப்பூ, கறிவேப்பிலை, வெங்காயம், மல்லிதழை,உப்பு, பச்சைமிளகாய் போட்டு நன்கு பிசையவும்.

3.ஒரு வாணலியில் எண்ணெயைக் காயவைத்து அது காய்ந்ததும் சிறு தீயில் வைத்துக் கொள்ளவும்.

4.மாவில் ஒரு சிறு உருண்டை எடுத்துக் கொண்டு உள்ளங்கையில் தட்டி எண்ணையில் போடவும்..

5.மிதமான தீயில் வேக விடவும். இதேபோல் எல்லாவற்றையும் போட்டு எடுக்கவும்.

6.மொறு மொறுவென்று சுடச் சுட சாப்பிட பிரமாதமாக இருக்கும் சுவையுடன் உடல் ஆரோக்கியத்திற்கும் நல்லது.

Other Articles

No stories found.
Kalki Online
kalkionline.com