வெஜ் நூடுல்ஸ் கட்லெட்
வெஜ் நூடுல்ஸ் கட்லெட்

வெஜ் நூடுல்ஸ் கட்லெட் ரெசிபி!

தேவையான பொருட்கள்:

நூடுல்ஸ் – 1 பாக்கெட்,

உருளைக்கிழங்கு – 2,

வெங்காயம் – 1,

மிளகாய் – 1,

குடைமிளகாய் – 1,

காரட் – ½,

பட்டாணி - 1 கப்,

மிளகாய்தூள் – ½ டீஸ்பூன்,

மஞ்சதூள் – டீஸ்பூன்,

உப்பு – தேவையான அளவு,

நூடுல்ஸ் மசாலா - 1 பாக்கெட்,

சிரகத்துள் – ½ டீஸ்பூன்,

சோள மாவு – 2 கப்,

எண்ணெய் – தேவைக்கேற்ப.

செய்முறை:

*கொஞ்சம் தண்ணீரை அடுப்பில் வைத்து மிதமான சூட்டில் இன்ஸ்டென் நூடுல்ஸ் பாக்கெட்டை உடைத்து போட்டு, ஒரு இரெண்டு நிமிடம் கொதிக்க விடவும். பின் அந்த வெந்த நூடுல்ஸ்ஸை தனியாக பிரித்து எடுத்து ஒரு கப்பில் வைத்து கொள்ளவும்.

*இரெண்டு உருளைக்கிழங்கு எடுத்து கொண்டு அதை குக்கரில் வைத்து நன்கு வெந்தவுடன் அதை பிசைந்து கொள்ளவும்.

*நாம் தனியாக எடுத்து வைத்த நூடுல்ஸ்வுடன் வேகவைத்து பிசைந்து எடுத்து கொண்ட உருளைக்கிழங்கு, வெங்காயம், மிளகாய், குடைமிளகாய், காரட், பட்டாணி, மிளகாய்தூள், மஞ்சதூள், உப்பு, நூடுல்ஸ் மசாலா, சிரகத்துள் அனைத்தையும் சேர்த்து நன்கு பிசைந்து கொள்ளவும்.

*அதன் பின் உங்கள் கையில் எண்ணெய் தேய்த்து கொண்டு அதை உங்களுக்கு தேவையான வடிவில் எடுத்து பிடித்து கொள்ளலாம், அதாவது தட்டை வடிவிளோ அல்லது உருண்டை விடிவிளோ பிடித்து கொள்ளலாம். எண்ணெய் தேய்த்து கொண்டு நீங்க உருண்டை பிடித்தால்தான் அது உங்கள் கையில் ஒட்டாமல் அழகாக வரும். அந்த வேலை முடிந்தவுடன் அதை எடுத்து தனியாக வைத்து கொள்ளவும்.

*மற்றொரு கப்பில் இரெண்டு கப் சோளமாவு எடுத்து அதில் தேவையான அளவு தண்ணீர் எடுத்து கொண்டு கலக்கவும். பின் மற்றொரு பாக்கெட் நூடுல்ஸ்யை உடைது ஒரு தட்டில் எடுத்து கொள்ளவும்.

*நாம் எடுத்து வைதிருந்த அந்த உருண்டை அல்லது தட்டயை எடுத்து கலக்கி வைதிருந்த சோளமாவில் இருபக்கமும் முக்கி எடுத்து கொண்டு, பின் அதை தட்டில் உடைத்து வைதிருந்த நூடுல்ஸ்யில் பிரட்டி எடுத்து கொள்ளவும்.

*ஒரு கடாயில் எண்ணெய் ஊற்றி மிதமான சூட்டில் அந்த உருண்டை அல்லது தட்டையை போற்று நன்கு வெந்தவுடன் எடுத்து சுட சுட சாப்பிட்டால் இந்த மழை காலதுக்கு ஒரு மொரு மொரு ஸ்நாக்ஸ் ரெடி.

Other Articles

No stories found.
Kalki Online
kalkionline.com