வெஜிடபிள் தோல் பகோடா!

வெஜிடபிள் தோல் பகோடா!

தேவை: கேரட், சவ்சவ், பீர்க்கன் காய், மஞ்சள் பூசணி ஆகிய காய்களை கழுவி சுத்தம் செய்து அவற்றின் தோல்களை சீவி எடுத்து, அவற்றை பொடிசா நறுக்கி கலந்த கலவை முக்கால் கப், கடலை மாவு 1 கப், அரிசி மாவு 2 டீஸ்பூன், பட்டர் 2 டீஸ்பூன், மிளகாய் தூள் 2 டீஸ்பூன், இஞ்சி, பச்சை மிளகாய் பொடிசா நறுக்கியது தலா 1 டீஸ்பூன், கறிவேப்பிலை, மல்லி தழை ஒரு கைப்பிடி, உடைத்த முந்திரிப் பருப்பு 15, உப்பு, தண்ணீர & எண்ணெய் தேவையான அளவு.

செய்முறை: மேலே கூறிய பொருள்களில் எண்ணெய் தவிர மற்ற அனைத்தையும் ஒரு பாத்திரத்தில் போட்டு நன்றாக கலந்து, பின் தண்ணீர் விட்டு, கிள்ளி எடுக்கும் பக்குவத்திற்கு பிசைந்துகொள்ளவும். பின் வாணலியில் எண்ணெய் ஊற்றி நன்கு சூடானதும் பிசைந்த மாவை கிள்ளி கிள்ளி எடுத்து எண்ணையில் உதிர்த்துப் போட்டு வேகவிடவும். திருப்பி விட்டு, பொன்னிறம் வந்ததும் எடுத்துவிடவும். சுவையும் சத்தும் நிறைந்த கர கர மொறு மொறு வெஜிடபிள் தோல் பகோடா ரெடி.

Related Stories

No stories found.
logo
Kalki Online
kalkionline.com