
இறைவனை மனதில் நிறுத்தி உணவுக்கட்டுபாட்டுடன் இருக்கும் விரதங்கள் உடல் + உள்ளம் + ஆன்மா... மூன்றுக்குமான அருமருந்து. அந்த வகையில் புரட்டாசி சனிக்கிழமை விரத வழிபாடு பழமைவாய்ந்ததும், மகத்துவம் மிக்கதுமாகும்.
புரட்டாசி சனிக்கிழமை விரதமிருந்து ஸ்ரீவெங்கடேச பெருமாளுக்கு தளியல் போட… சகல தடைகள் + சங்கடங்கள் நீங்கிவாழ்வில் வளம் பெருகும்.
தேவையான பொருட்கள்:
கோதுமை ரவை ½ கப், பால் 1½ கப், பொடித்த வெல்லம் ¾ கப், ஏலத்தூள் ½ டீஸ்பூன், முந்திரி திராட்சை தலா 8, கிராம்பு 1, நெய் 4 டேபிள்ஸ்பூன்.
செய்முறை:
கோதுமை ரவையை 1 டீஸ்பூன் நெய்யில் வாசம் வரை வறுத்து, 1 கப் தண்ணீர் சேர்த்து வேக வைக்கவும். நன்றாக வெந்ததும் அதில் பால் சேர்த்து பால் வற்றும் வரை நன்கு கிளறவும் (அடிப்பிடிக்காமல்).
பொடித்த வெல்லத்துடன் 1 டேபிள்ஸ்பூன் தண்ணீர் சேர்த்து சூடாக்கி, வெல்லம் கரைந்ததும் வடிகட்டி, கோதுமை ரவைக் கலவையோடு கலக்கவும். அதனுடன் பாதியளவு நெய் + ஏலத்தூள், கிராம்பு சேர்த்துக் கிளறி இறக்கவும்.
மீதமுள்ள நெய்யில் முந்திரி + திராட்சை ஆகியவற்றை வறுத்து, ரவைக் கவலையோடு சேர்த்துக் கிளறவும்.
இப்படி எல்லாம் செய்து பெருமாளுக்கு தளியல் போட வாழ்வில் சகல சௌபாக்கியம் கிட்டும்.
பெருமாளை கும்பிடுபவர்கள் மட்டும்தான் தளியல் போட வேண்டும் என்பதில்லை. யார் வேண்டுமானாலும் உண்மையான பக்தியுடன் விரதம் இருந்து, தளியல்போட வெங்கடேச பெருமானின் பரிபூரண அருள் நிச்சயம் கிட்டும்.
புரட்டாசி சனிக்கிழமை தளியல் போட்டு மகிழ்வுடன் கொண்டாடுங்கள். சகல சௌபாக்கியங்களும் வாழ்வில் கிட்டும்.