கோதுமை ரவை ஸ்வீட் பொங்கல்
கோதுமை ரவை ஸ்வீட் பொங்கல்

கோதுமை ரவை ஸ்வீட் பொங்கல்!

தேவையான பொருட்கள்:

கோதுமை ரவை 1 டம்ளர்
பயத்தம் பருப்பு 1/2 டம்ளர்
பொடித்த வெல்லம் 1 டம்ளர்
ஏலக்காய் தூள் சிறிது
முந்திரி 10
திராட்சை 10
நெய் தேவையான அளவு

செய்முறை:

கடாயில் நெய் சிறிது விட்டு கோதுமை ரவையை லேசாக வறுத்து கொள்ளவும்.

ஒரு நான்ஸ்டிக் பாத்திரத்தில் பயத்தம் பருப்பை போட்டு தேவையான நீரை ஊற்றி குழைய வேகவைக்கவும்.

அதில் வறுத்த கோதுமை ரவையை சேர்த்து கிளறி இரு டம்ளர் நீர் சேர்த்து மூடி வேகவைக்கவும்.

கோதுமை ரவை ஸ்வீட்
கோதுமை ரவை ஸ்வீட்


கோதுமை ரவை வெந்ததும் வெல்லத்தை சேர்த்து நன்றாக கிளறி மறுபடியும் ஐந்து நிமிடம் மூடி வைக்கவும்.

அதன்பிறகு ஏலக்காய் தூள் சேர்த்து நன்றாக கிளறி விடவும்.  ஒரு சிட்டிகை தூள் உப்பு சேர்க்கலாம். அது இனிப்பை கூட்டி கூடுதல் சுவையை தரும்.

மற்றொரு கடாயில் தேவையான அளவு நெய் ஊற்றி முந்திரி, திராட்சையை நன்றாக சிவக்க வறுத்து கொள்ளவும்.

அதை இனிப்பு பொங்கலில் தூவி சேர்த்து  கிளறி இறக்கவும். மேலாக மறுபடியும் இரண்டு ஸ்பூன் நெய் சேர்க்கலாம்.

வழக்கமாக செய்யும் சர்க்கரை பொங்கலை விட இந்த எளிமையான கோதுமை ரவை ஸ்வீட் பொங்கல்  சுவையானது மற்றும் சத்து நிறைந்தது. இந்த எளிய சத்து நிறைந்த புதியவகை ஸ்வீட் பொங்கலை செய்து அனைவரையும் மகிழ்ச்சியில் ஆழ்த்தலாம்.

Other Articles

No stories found.
Kalki Online
kalkionline.com