அப்பளம்! பப்படம்! பப்பட்!
அப்பளம்! பப்படம்! பப்பட்!

அப்பளம்! பப்படம்! பப்பட்! வித்தியாசம் என்ன தெரியுமா? 

ந்தியர்களுக்கு கிரிக்கெட் மட்டும் தான் பிடிக்கும் என நினைக்கிறீர்களா? கிரிக்கெட் போலவே தின்பண்டங் களையும் இந்தியர்களுக்கு அதிகம் பிடிக்கும். அதிலும் அவை மொறுமொறுப்பான தின்பண்டங்களாக இருந்தால், சொல்லவே வேண்டாம் பாக்கெட் மொத்தத்தையும் காலி செய்த பிறகு தான் மனசு திருப்தியாக இருக்கும். இத்தகைய தின்பண்டங்களில் அப்பளம், பப்படம் மற்றும் பாபட் ஆகிய மூன்றும் அதிகமாக இந்தியர்களால் விரும்பி உண்ணப்பட்டாலும், இவற்றுக்கிடையே உள்ள வித்தியாசம் பெரும்பாலானவர் களுக்கு தெரிவதில்லை. 

அப்பளம்
அப்பளம்

அப்பளம்: தென்னிந்திய உணர்வு

பொதுவாகவே 'அப்பளம்' என்ற சொல் இந்தியாவில் உச்சத்தில் இருக்கும் பகுதி தென்னிந்தியா தான். இப்போ நான் சொல்லப்போறத அப்படியே இமேஜின் பண்ணிக்கோங்க. நீங்க ஒரு தென்னிந்திய ஹோட்டலுக்கு சாப்பிட போறீங்க. அங்க போய் மீல்ஸ் ஒன்னு ஆர்டர் பண்ணுறீங்க. முதல்ல ஒரு சில்வர் தட்டு, பிறகு கூட்டு, பொரியல், சாதம் குழம்புன்னு எல்லாத்தையும் பரிமாறிய பிறகு, கடைசியில வருவான் பாருங்க ஒருத்தன். ரொம்ப மெல்லிசா. இந்த பக்கம் லைட் அடிச்சா அந்த பக்கம் வெளியே வரும். ஒரு சின்ன காத்து அடிச்சா போதும், மந்திரவாதி முயலை மறைய வைக்கும் வேகத்தை விட வேகமா பறந்து காணாம போயிடுவான். அவன் பேரு தான் அப்பளம். உளுத்தம் பருப்பு மாவு, அரிசி மாவு, கொஞ்சமா உப்பு சேர்த்து, நல்லா பெசஞ்சி வட்டமா உருட்டி வெயில்ல காய வச்சு எடுத்தா அப்பளம் ரெடி. இத தானே பாரம்பரியமா தென்னிந்தியாவுல அப்பளம்னு சாப்பிட்டுக்கிட்டு இருக்கோம். 

பப்படம்
பப்படம்

பப்படம்: வட இந்திய மர்மம்

ப்பளத்திற்கு நேர் எதிராக வட இந்தியாவில் அதிகம் பயன்படுத்தும் சொல் பப்படம் ஆகும். இப்போ நீங்க ஒரு பஞ்சாபி தாபாவுக்கு போறீங்கன்னு வச்சுப்போம். அங்க சுவையான நான் மற்றும் பன்னீர் பட்டர் மசாலா ஆர்டர் பண்றீங்க. உங்க ஆர்டரும் வந்துடுச்சு. கொஞ்ச நேரம் கழிச்சு, ஒரு சின்ன சைஸ் தட்டு மாதிரி உங்க முன்னாடி சர்வர் கொண்டு வந்து ஒரு பொருளை வைக்கிறார் வைக்கிறார். 

யோவ் என்னய்யா இது? 

–இதுதான் சார் பப்படம். 

என்ன, பாக்க அப்பளம் மாதிரி இருக்கு பப்படம்னு என்ன சொல்ற? 

–இல்ல சார் உங்க அப்பளத்தை எண்ணெயில் பொரிப்பீங்க. நாங்க இந்த பப்படத்தை தீயில சுடுவோம் அவ்வளவு தான் சார் வித்தியாசம். 

பாப்பட்
பாப்பட்

பாப்பட்: ஒரு குழப்பம்

நீங்கள் அப்பளம், பப்படம் இரண்டிற்கும் இடையேயான வித்தியாசத்தை தெரிந்து கொண்டபோது, திடீரென "நடுவுல் இந்த கௌசிக் வந்தா" என அனைவரையும் குழப்ப வருபவர்தான் பாப்பட். இதை அப்பளம் மற்றும் பப்படத்தின் குழந்தை என சொல்லலாம். இது இந்தியா முழுவதுமே விரும்பி உண்ணப்படும் மொறுமொறுப்பான சிற்றுண்டியாகும். இதற்கு அப்பளம், பப்படம் போன்று குறிப்பிட்ட வடிவம் கிடையாது. சதுரம், செவ்வகம், முக்கோணம் என விரும்பிய வடிவத்தில் கிடைக்கும். 

அப்படின்னா, இந்த பதிவு வழியா அப்பளம், பப்படம் மற்றும் பாப்பட்- ன் வித்தியாசம் உங்களுக்குத் தெரிஞ்சிடுச்சு. ஆனால் கொஞ்சம் டீப்பா சிந்திசசு பாத்தா, இந்த மூன்று உணவுகளுக்குமான மூலப்பொருட்கள் ஒன்றுதான். அதை சமைக்கும் முறை, பயன்படுத்தப்படும் இடம், உருவாக்கும் வடிவம் காரணமாகவே வித்தியாசமான பெயர்களில் கூறப்படுகிறது. 

Related Stories

No stories found.
logo
Kalki Online
kalkionline.com