குலதெய்வ வழிபாடு அவசியமா?

குலதெய்வ வழிபாடு அவசியமா?

த்தனை தெய்வங்களை வணங்கினாலும் அவரவர் குல தெய்வத்தை வணங்குவதே நன்மை பெற எளிதான வழிபாடாகும் ஏனெனில் மிகவும் வலிமையான தெய்வம் குலதெய்வம் மட்டுமே.

முன்னோர்களையே குலதெய்வமாக வழிபடுவதால் அவர்கள் வாழ்ந்த இடத்திலேயே இருக்கும் என்பதால் குலதெய்வ கோவில்கள் பொதுவாக காடு, மலை, வயல் மற்றும் சாலை வசதி இல்லாத இடங்களில்தான் அமைந்திருக்கும். முறைப்படி அமைக்கப்படாத இக்கோவில்கள் சிறிய அளவிலும், பெரிய ஆலயங்கள் போல் கோபுரங்கள் இல்லாமலும், அந்தந்த இடத்திற்குத் தகுந்தாற்ப் போல் இருக்கும்.

பெரும்பாலும் நகரங்களை விட்டுக் கிராமங்களில் இக்கோவில்கள் இருப்பதால் வாகன வசதிகள் இல்லாமல் இருக்கும். எனினும் வருடம் ஒரு முறையாவது சென்று வழிபடுவது நம் கடமை. கிழக்கு அல்லது வடக்கு திசை நோக்கி இருக்கும் இந்த சிறு கோவில்களில் வேம்பு மற்றும் வில்வ வகை மரங்கள் இருப்பதைக் காணலாம்.

திருமணம், வீடு கட்டுவது, போன்ற விசேஷங்களின் போது, மறக்காமல் குலதெய்வத்தை வழிபட்டுப் பின் பணியைத் துவக்க வேண்டும். இதனால் அந்தப் பணி எவ்வித இடைஞ்சலும் இல்லாமல் வெற்றிபெறும்.

பிறந்த குழந்தைக்கு முதல் மொட்டை போடுதல், காது குத்துதல் போன்ற நிகழ்ச்சிகள் குலதெய்வக் கோவில்களிலே நடைபெறுவதை வழக்கமாக்கிச் சென்றுள்ள முன்னோர்கள் புத்திசாலிகள். இதை சாக்கு காட்டியாவது இளைய தலைமுறையினர் இந்தக் கோவிலுக்கு செல்வது கட்டாயமாகிறது.

திருமணம் தொழில் துவக்கம் வீடு கிரகப்பிரவேசம் போன்ற எந்த விழாவானாலும் முதல் அழைப்பிதழ் குலதெய்வத்திடம் வைத்து பூஜித்த பின்னே மற்றவர்கள் கைகளுக்கு செல்கிறது.

சுப நிகழ்ச்சிகளின் போது குல தெய்வத்தை நினைத்து வேண்டி காணிக்கையை ஒரு மஞ்சள் துணியில் கட்டி குலதெய்வக் கோவிலுக்கு செல்லும் போது செலுத்திவிடுகின்றனர்.

மற்ற அம்மன் கோவில்கள்போல காணிக்கை அளித்தல், தீ மிதித்தல், தீச்சட்டி எடுத்தல், தொட்டில் கட்டுதல் போன்ற நிகழ்ச்சிகளும் குலதெய்வ கோவில்களில் நடத்தப் படுகின்றன.

முக்கியமாக  ஆடி மாதங்களில் குலதெய்வங்களுக்கு' பங்காளிகள் எல்லோரும் ஒன்று சேர்ந்து உற்றார் உறவுகளையெல்லாம் அழைத்து சிறப்பு பூஜைகளை நடத்துவார்கள்.

இவ்வழிபாட்டினை மேற்கொள்வதால் தங்கள் குடும்பத்துக்கும், குடும்ப உறுப்பினர்களுக்கும் எவ்வித தீங்கும் ஏற்படாது, வளமான வாழ்க்கை கிடைப்பதாக மக்கள் கருதுகின்றனர்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com