பாஸிட்டிவ் வைப் தரும் ட்ரீம் கேட்சர்!

பாஸிட்டிவ் வைப் தரும் ட்ரீம் கேட்சர்!

ன்றைய இளைஞர்கள் மூடநம்பிகைகளை அறவே வெறுக்கிறார்கள். ஆனால், அறிவியல் ரீதியான சில விஷயங்களை நம்பி அதன் பின் செல்கிறார்கள். அப்படி அறிவியல் ரீதியான ஒன்றுதான் ட்ரீம் கேட்சர் (Dream catcher). இதற்கு, ‘கனவை பிடிப்பவர்’ என்று பொருள்.

ஒருவரின் கனவுகளை இந்த ட்ரீம் கேட்சர் நிறைவேற்றுவதாக பலராலும் நம்பப்படுகிறது. அது எப்படி சாத்தியம்? Fengshui என்பது ஒரு சைனீஸ் வார்த்தையாகும். தற்போது வாஸ்து என்று நாம் கூறுவதுதான் Fengshuiக்கும் பொருந்தும். இந்தக் கூற்றுப்படிதான் ட்ரீம் கேட்சரும் உருவாக்கப்பட்டுள்ளது. அமைதியின் அடையாளம் புறா. இதன் இறகுகளாலேயே இந்த ட்ரீம் கேட்சர் தயாரிக்கப்படுவதால் வீட்டில் அமைதி நிலவும் என நம்பப்படுகிறது. மேலும், ட்ரீம் கேட்சர் ஒரு வளைவுக்குள் சிலந்தி வலை போன்று பின்னப்பட்டு இருக்கும். இந்த வலை போன்று எந்தப் பிரச்னை வந்தாலும் அதில் இருந்து மீண்டு வந்துவிடலாம் என்று கூறப்படுகிறது.

பலருக்கும் இரவில் கெட்ட கனவுகள் வரும். பெரும்பாலானோர் வீடுகளில் தற்போது இந்த ட்ரீம் கேட்சர் வைக்கப்பட்டுள்ளது. இதைப் பார்த்து விட்டு தூங்கினால் நல்ல கனவுகள் வரும் என்பது அவர்களின் நம்பிக்கையாகும். இது பல நாடுகளிலும் கடைபிடிக்கப்பட்டு வருகிறது. அதன் தொடர்ச்சியாக தமிழகத்திலும் இது நுழைந்துள்ளது. தற்போது அனைத்து இளைஞர்களும் இதன் மீது நாட்டம் செலுத்த ஆரம்பித்துள்ளனர்.

ட்ரீம் கேட்சரை எங்கே வைக்க வேண்டும்?

பலரும் ட்ரீம் கேட்சரை வாங்கிவிடுவார்கள். ஆனால், அதை எங்கே வைப்பது என்று அவர்களுக்குத் தெரியாது. ட்ரீம் கேட்சரை நிச்சயமாக வீட்டின் ஹாலில்தான் வைக்க வேண்டும் என்று சொல்லப்படுகிறது. மேலும், ட்ரீம் கேட்சரில் உள்ள இறகுகள் நம் தலையின் மேல் உரசாத அளவுக்கு மேலே தொங்கவிட வேண்டும். எந்த நிறத்தில் வேண்டுமென்றாலும் நாம் ட்ரீம் கேட்சரை வாங்கிக் கொள்ளலாம். கருப்பு நிறத்தில் வாங்கினால் அது கெட்டது என நினைக்க வேண்டாம் என்றும் கூறப்படுகிறது.

ட்ரீம் கேட்சர் வண்ண வண்ண நிறங்களில் அழகாக இருப்பதால், இதைப் பார்த்தவுடன் மனதில் மகிழ்ச்சியை உண்டாக்கும். இதனால் நமக்கு பாஸிட்டிவ் வைப் கிடைக்கும் என நம்பப்படுகிறது.

ட்ரீம் கேட்சர் விலை என்ன?

ஒரு சாதாரண ட்ரீம் கேட்சர் 200 ரூபாய் முதல் 300 ரூபாய் வரையாகும். தற்போது விதவிதமான ட்ரீம் கேட்சர்கள் தயாரிக்கப்படுகின்றன. அதேபோன்று, இவை லைட்ஸுடன் வேண்டுமென்றால் அது 400 ரூபாய் முதல் 500 ரூபாய் வரை விற்பனை செய்யப்படுகிறது. இதை நீங்கள் ஆன்லைனில் ஆர்டர் செய்தும் வாங்கலாம். ட்ரீம் கேட்சரை நமக்கு நாமே வாங்குவதை விட, மற்றவர் நமக்குப் பரிசளிப்பதுதான் மிகவும் நல்லது என்று கூறப்படுகிறது.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com