தீய சக்திகளை விரட்டும் மருதாணி தூபம்!

தீய சக்திகளை விரட்டும் மருதாணி தூபம்!

திருமகளாம் மகாலட்சுமிக்கு மிகவும் உகந்தது மருதாணி. பெண்கள் தங்களின் வளைக்கரங்களை அழகுபடுத்தவும் மருதாணியைப் பயன்படுத்துகின்றனர். ஆன்மிகத்தில் மிகச் சிறந்த பரிகாரப் பொருளாகப் பயன்படும் இந்த மருதாணி, வீட்டில் உள்ள தீய சக்திகளை வெளியேற்றும் தன்மையையும் கொண்டது. வீட்டில் மருதாணி செடி ஒன்று இருந்தாலே அந்த வீட்டை தீய சக்திகள் அண்டாது. மாலை நேரங்களில் இந்த மருதாணிப் பூவின் வாசம் அதன் சுற்றுப்புறத்தையே மிகவும் நறுமணம் மிக்கதாக மாற்றுகிறது. இந்த நறுமணத்தின் வாசமே தீய சக்திகளை நெருங்க விடாமல் தடுக்கிறது.

மருதாணி பூவின் வாசம் தீய சக்திகளை மட்டுமின்றி, ஒருசில விஷப் பூச்சிகளையும் தன்னைச் சுற்றி அண்ட விடுவதில்லை. சாதாரணமாகவே மருதாணிப் பூவின் வாசம் கெட்ட சக்திகளை நெருங்க விடாது என்றாலும், மருதாணி செடியின் விதைகளைக் கொண்டு வீட்டில் போடப்படும் தூபம், பில்லி சூன்யம், ஏவல் போன்ற தீய சக்திகளை அகற்றி, நமக்கு பல்வேறு நன்மைகளைச் செய்கிறது.

மருதாணி செடியில் காய்த்து நன்கு முற்றிய விதைகளைப் பறித்து நன்றாக காய வைத்து ஒரு பாட்டிலில் போட்டு வைத்துக்கொள்ள வேண்டும். தினமும் காலையிலும் மாலையிலும் வீட்டில் தூபம் போடும்போது அதில் இந்த விதைகள் சிறிதை சேர்த்து தூபம் போட தீய சக்திகள் அந்த வீட்டில் இருந்து அகற்றப்படுவதோடு, மகாலட்சுமியின் கடாட்சமும் அந்த வீட்டில் நிறையும். இப்படி தினமும் செய்ய முடியாதவர்கள் வாரத்தில் வெள்ளிக்கிழமை மட்டுமாவது இந்த தூபம் போட்டு வர நல்ல நன்மைகளைக் கண்கூடாகக் காணலாம்.

வாடகை வீடாக இருக்கும் பட்சத்தில் அந்த வீட்டில் உள்ள தோஷங்கள் மற்றும் வாஸ்து கோளாறுகளும் இந்த மருதாணி தூபத்தினால் நீங்கி சுபிட்சம் காணலாம். தாந்த்ரீக வித்தைகளில் கூட மருதாணி விதைகளைப் பயன்படுத்தி பலன் கண்டு இருக்கிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது. சொந்த வீடாக இருக்கும்பட்சத்தில் வீட்டின் ஒரு பகுதியில் மருதாணி செடி ஒன்றை வளர்த்து வருவது பல்வேறு நன்மைகளை அந்த வீட்டுக்குக் கொண்டுவரும் என்பதில் சந்தேகமேயில்லை.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com