கிருத்திகை விரதம்!

ஆடிக்கிருத்திகை 09-08-2023
கிருத்திகை விரதம்!

டி மாதம் அம்மனுக்கு மட்டுமல்ல அனைத்து தெய்வங்களையும் வழிபட மிகவும் ஏற்ற மாதமாகும். அப்படி ஆடி மாதத்தில் வரும் சிறப்பான நாட்களில் ஒன்றாகவும், முருகப் பெருமானை வழிபடுவதற்கு ஏற்ற நாளாகவும் கருதப்படுவது ஆடிக்கிருத்திகை நாளாகும்.

முருகப் பெருமான் அவதரித்தது விசாகம் நட்சத்திரத்தில் என்றாலும், அவரை வளர்த்தெடுத்தது கார்த்திகை பெண்கள் என்பதால் அவர்களை சிறப்பிக்கும் வகையில் கார்த்திகை நட்சத்திரம் முருகப் பெருமானை வழிபடுவதற்கு ஏற்ற நட்சத்திரமாக மாறியது. மாதம்தோறும் கார்த்திகை நட்சத்திரம் வந்தாலும் தை, கார்த்திகை, ஆடி மாதங்களில் வரும் கார்த்திகை நட்சத்திரம் மிகவும் சிறப்பு வாய்ந்ததாகும்.

முருகப் பெருமான், செவ்வாய் கிரகத்திற்கு உரிய தெய்வம் என்பதால் ஆடி மாதத்தில் வரும் கிருத்திகை நட்சத்திரத்தில் முருகப் பெருமானை வழிபட்டால் செவ்வாய் தோஷம் உள்ளிட்ட அனைத்து தோஷங்களும் நீங்கும். அதோடு வீடு-மனை, சொத்துக்கள் தொடர்பான பிரச்சனைகள் நீங்கும். திருமணத்தடை அகலும். ஆடி மாதம் தட்சணாயன காலத்தின் துவக்க மாதம் என்பதால் முருக பக்தர்கள் பலரும் ஆடி மாத கிருத்திகையில் துவங்கி, தை மாத கிருத்திகை வரையிலான 6 மாதங்கள் கிருத்திகை விரதம் கடைபிடிப்பார்கள்.

ஆடிக்கிருத்திகை வழிபாட்டு முறை:
டி கிருத்திகை அன்று முருகனின் அறுபடை வீடுகளில் சிறப்பு அபிஷேக, ஆராதனைகள், பூஜைகள் நடத்தப்படும். கார்த்திகை விரதம் இருப்பவர்கள் உப்பில்லா உணவை எடுத்துக் கொண்டு விரதம் இருப்பது சிறப்பானதாகும். கார்த்திகை விரதத்தன்று கந்தசஷ்டி பாராயணம் செய்து, மறுநாள் ரோகிணி நட்சத்திரத்தன்று காலையில் குளித்து விட்டு, பக்தர்களுக்கு அன்னதானம் செய்து விட்டு, பிறகு விரதத்தை நிறைவு செய்வது சிறப்பானதாகும். கந்தசஷ்டி கவசத்துடன் கந்த குரு கவசம், திருப்புகழ் படிப்பது மிகப் பெரிய புண்ணியத்தை தரும்.

திருமணம் ஆகாதவர்கள் ஆடி கிருத்திகை நாளில் திருப்புகழில் உள்ள பாடலை பாராயணம் செய்து வழிபடுவதால் விரைவில் திருமண வரம் கூடி வரும். பகல் முழுவதும் உப்பில்லாமல் உணவு எடுத்துக் கொண்டு, மாலையில் அருகில் உள்ள முருகப் பெருமான் கோவிலுக்கு சென்றும் விரதத்தை நிறைவு செய்யலாம்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com