திருப்பதி போறீங்களா? அக்டோப்ர் மாத தரிசன டிக்கெட் புக்கிங் எப்போது தெரியுமா?

Tirupati
TirupatiIntel

அக்டோபர் மாதம் ஏழுமலையானை வழிபடுவதற்கு தேவையான ஸ்ரீவாணி அறக்கட்டளை டிக்கட்டுகள் இம்மாதம் 24ஆம் தேதி காலை 11 மணிக்கு ஆன்லைனில் வெளியிடப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

திருப்பதிக்கு தினசரி லட்சக்கணக்கான பக்தர்கள் ஏழுமலையான தரிசனம் செய்ய வருவார்கள். இலவச தரிசனம், சிறப்பு தரிசனம் என அனைத்திற்கும் முன்கூட்டியே ஆன்லைனில் டிக்கெட் செய்து கொள்ளும்படி ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இதனால் பக்தர்கள் கூட்ட நெரிசலை தவிர்க்கும் வகையில், முன்கூட்டியே ஆன்லைனில் டிக்கெட் புக் செய்து கொள்வார்கள். அந்த வகையில் அக்டோபர் மாத தரிசன டிக்கெட் புக் செய்யப்படும் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது.

திருமலை திருப்பதி தேவஸ்தானத்தின் ஸ்ரீவானி அறக்கட்டளைக்கு தலா 10,000 ரூபாய் நன்கொடை வழங்கும் பக்தர்களுக்கு 500 ரூபாய் கட்டணத்தில் ஆன விஐபி பிரேக் தரிசன டிக்கெட் ஒன்று வழங்கப்பட்டு வருகிறது. இந்த ஸ்ரீவாணி அறக்கட்டளைக்கு நன்கொடை வழங்கி டிக்கெட் வாங்கி விஐபி பிரேக் தரிசனம் மூலம் ஏழுமலையானை அக்டோபர் மாதம் வழிபட விருப்பமுள்ள பக்தர்கள் இம்மாதம் 24ஆம் தேதி காலை 11:00 மணி முதல் தேவஸ்தான வெப்சைட்டில் டிக்கெட்டுகளை முன் பதிவு செய்து கொள்ளலாம்.

அதேபோல் அக்டோபர் மாதம் ஏழுமலையானை வழிபட விரும்பும் மூத்த குடிமக்கள், மாற்றுத்திறனாளிகள் ஆகியோர் தங்களுக்கு தேவையான டோக்கன்களை இம்மாதம் 24ஆம் தேதி மாலை 3 மணிக்கு துவங்கி தேவஸ்தான வெப்சைட்டில் முன்பதிவு முறையில் பெற்று கொள்ளலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் டிக்கெட்டுகள் மற்றும் டோக்கன்கள் தேவையான பக்தர்கள் தேவஸ்தானத்தின் WWW.tirupathibalaji.ap.gov.inவெப்சைட்டில் முன்பதிவு செய்து கொள்ளலாம்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com