செய்வினை கோளாறுகளைத் தடுக்கும் ஐம்பொன் ஆபரணம்!

செய்வினை கோளாறுகளைத் தடுக்கும் ஐம்பொன் ஆபரணம்!

ம்பொன் என்பது தங்கம், வெள்ளி, செம்பு, இரும்பு, ஈயம் ஆகிய உலோகங்கள் ஆகும். இந்த ஐந்து உலோகங்களில் ஏதாவது ஒன்று தங்கள் உடலின் அணிகலனாக இருக்கும்படி வாழ்ந்து வந்தனர் நமது முன்னோர்கள். இந்த உலோகங்கள் நமது உடலை அண்டத்துடன் இணைக்கும் மாய வேலையை செய்வதை அவர்கள் உணர்ந்திருந்தனர். இவற்றை அணிவதால் இந்த உலோகத்தில் உள்ள சத்துக்கள் நம் உடலால் ஈர்க்கப்பட்டு நம்மை இயக்கும். இது அறிவியல் ரீதியான உண்மை. இந்த ஐம்பொன் ஆபரணங்களுக்கு அதிக காந்த ஈர்ப்பு சக்தி உண்டு.

பஞ்சலோகம் எனப்படும் இந்த ஐம்பொன்னில், தங்கம் குருவின் சக்தியையும், வெள்ளி சுக்ரனின் சக்தியையும், செம்பு சூரியனின் சக்தியையும், இரும்பு சனியின் சக்தியையும், ஈயம் கேதுவின் சக்தியையும் வழங்கக் கூடியவை. இந்த ஐம்பொன் கலவையைக் கொண்டு செய்யப்படும் ஆபரணங்களை கைகளுக்கு மோதிரமாகவோ, காப்பாகவோ செய்து உடலில் அணிந்தால் உடலின் வெப்பம் சமனப்படும். மோதிர விரலில் உள்ள முக்கியமான நரம்பு மண்டல புள்ளி நமது நுண்ணிய உணர்வுகளை கட்டுபடுத்தும் தன்மை கொண்டது. நமது மணிக்கட்டு பகுதியில் ஐந்து முக்கியமான நரம்புப் புள்ளிகள் உள்ளன. இது சக்தி ஓட்டத்தை விரல் நுனியில் இருந்து உடலின் இராஜ உறுப்புகளுக்குக் கடத்துகிறது.

ஐம்பொன்னால் ஆன மோதிரங்கள் அல்லது காப்புகள் அணிவதால் பிரபஞ்சத்தில் உள்ள சக்தியை ஈர்த்து ஒரு வேதியல் மாற்றத்தை உண்டுபண்ணி இந்த முக்கிய நரம்புப் புள்ளிகள் வழியாக அனுப்பி உடலின் இராஜ உறுப்புகளான இதயம், மூளை, நுரையீரல், சிறுநீரகம், கல்லீரல் போன்றவற்றின் செயல்பாடுகளை ஊக்கப்படுத்துகிறது. ஐம்பொன் ஆபரணங்கள் இரத்தத்தை சுத்தப்படுத்தும், சரும நோய்களைத் தடுக்கும், இரத்த கொதிப்பை சீராக்கும், கை வலி மற்றும் உடல் உஷ்ணத்தைக் குறைக்கும், நரம்பு சம்பந்தமான வியாதிகளை குணமாக்கும். இதுமட்டுமின்றி, கண் திருஷ்டியை போக்குவது, தீய சக்திகள் (ஆவிகள், ஏவல் சக்திகள், மந்திரம், எந்திரம்), செய்வினை கோளாறுகள் ஐம்பொன் ஆபரணம் அணிபவரின் உடலுக்கு எந்த தாக்கத்தையும் ஏற்படுத்துவதில்லை.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com