ஏலியன்கள் உண்மையிலேயே இருக்கிறார்கள்! நாசாவின் புதிய அறிக்கை!
மெக்சிகோவில் இரு தினங்களுக்கு முன்பு தான் ஆயிரம் ஆண்டுகள் பழமையான வேற்றுகிரகவாசிகளின் உடல் என இரண்டு உடல்கள் காட்சிப்படுத்தப்பட்டது. இது பெரு நாட்டிலுள்ள ஒரு சுரங்கத்திலிருந்து எடுத்ததாகத் தெரிவித்தனர். இந்நிலையில் அமெரிக்காவின் விண்வெளி ஆய்வு நிறுவனமான நாசா, அடையாளம் காணப்படாத பறக்கும் தட்டுகள் (UFO) பற்றிய அறிக்கை ஒன்றை சமர்ப்பித்துள்ளது. அதன்படி வேற்றுகிரகவாசிகள் இருப்பது உண்மைதான் என்றும் சொல்லப்படுகிறது.
நாசாவின் அறிக்கையின்படி, " நம்மால் அடையாளம் காண முடியாத பறக்கும் தட்டுக்கள் அமெரிக்க வான்வெளி பாதுகாப்புக்கு அச்சுறுத்தலாக இருக்கிறது என்றும், அவை தன்னை தெளிவாக வெளிக்காட்டிக் கொள்கிறது என்றும் தெரிவித்துள்ளனர். இதுகுறித்த ஆய்வுகள் ஒரு தனித்துவமான அறிவியல் கண்ணோட்டத்தை வழங்குகிறது. மேலும் இந்த ஆய்வுகள், ஒரு ஆதார அடிப்படையான அணுகுமுறையில் மேற்கொள்ளப்பட்டு, AI தொழில்நுட்பம், இயந்திரக் கற்றல், பொதுமக்களின் ஈடுபாடு மற்றும் கண்காணிப்பு ஆகியவற்றுடன் இணைந்து, இதை மேலும் அடையாளம் காண முயற்சிப்பதாகவும் அவர்கள் கூறியுள்ளனர்.
UAP எனப்படும் பூமியில் நடக்கும் அடையாளம் காண முடியாத நிகழ்வுகளை ஆய்வு செய்து, அதுசார்ந்த தரவுகளை சேகரிக்கும் அரசாங்கத்தின் முயற்சியில் நாசாவும் முக்கிய பங்கு வகிக்கிறது. எதிர்காலத்தில் இவற்றைப்பற்றி தரவுகளை சேகரித்து, தொழில்நுட்ப நிபுணத்துவம், தரவு பகுப்பாய்வு மற்றும் பூமியை சிறப்பாக மாற்றும் சில விஷயங்களுக்கு பயன்படுத்த வேண்டும் என பரிந்துரை செய்யப்பட்டுள்ளது.
இதுகுறித்து பேசிய UAP ஆய்வுக் குழுவின் தலைவரான டேவிட், " நாசா சமர்ப்பித்த அறிக்கையை எங்கள் குழு தீவிரமாக விசாரித்து வருகிறது. இதற்காக நாங்கள் வகைப்படுத்தப்படாத தரவுகளை பயன்படுத்துவது அவசியமாகிறது. இந்தத் தரவுகளில் புதைந்திருக்கும் உண்மையை நாம் கண்டறிய இனிவரும் காலங்களில் எல்லா வகைப்படுத்தப்படாத தரவையும் எங்களின் சிறப்புக் குழு ஆராய்ந்து, இது பற்றிய உண்மையை சேகரித்து மக்களுக்கு வழங்கும்" எனத் தெரிவித்துள்ளார்.
இதன் மூலமாக ஏலியன்கள் இருப்பதற்கான சாத்தியக்கூறுகள் அதிகம் என்றும் சொல்லப்படுகிறது.