சந்திராயன் 3- லேண்டெர் இன்ஜினின் அசர வைக்கும் தொழில்நுட்பம்!
இன்று நிலவில் தரையிறங்க இருக்கும் சந்திராயன் மூன்று லேண்டரினுடைய அதிநவீன தொழில்நுட்பம் குறித்து இஸ்ரோ வெளியிட்டுள்ள அறிவிப்பில் கூறப்பட்டுள்ளவை.
பூமிக்கு மிக அருகில் இருக்கக்கூடிய சந்திரனை ஆய்வு செய்ய உலகின் பல்வேறு நாடுகளும் தீவிர ஆர்வம் காட்டுவர். இதனாலேயே இந்தியாவும் நிலவைப் பற்றி ஆய்வு செய்ய தீவிர ஆர்வம் காட்டி வருகிறது. மேலும் சொல்லப்போனால் நிலவை ஆய்வு செய்வது இந்தியாவுடைய கனவு திட்டம் கூட. இந்த நிலையில் 2019 ஆம் ஆண்டு சந்திராயன் 2 நிலவை ஆய்வு செய்ய ஏவப்பட்ட நிலையில் தரையிறங்கும் பொழுது கீழே விழுந்து சேதம் அடைந்தது. அதன் பிறகு சந்திராயன் 3 வடிவமைக்க திட்டமிடப்பட்டது.
அதேநேரம் சந்திராயன் மூன்றில் கடந்த முறை ஏற்பட்ட தவறுகளை சரி செய்ய பல்வேறு நவீன உத்திகள் வகுக்கப்பட்டன. இதன் தொடர்ச்சியாக சந்திராயன் இரண்டில் இருந்ததை விட வடிவமைப்பில் மாற்றம், சென்சார், கேமரா, திஸ்டர் போன்றவற்றிலும் மாற்றும் செய்யப்பட்டுள்ளது. அதோடு பல்வேறு வகையான தொழில்நுட்ப மாற்றங்கள் சந்திராயன் மூன்று புகுத்தப்பட்ட பல்வேறு ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டிருக்கிறது.
இந்த நிலையில் திரவ உந்தியில் மையம் மகேந்திரகிரி மற்றும் திருவனந்தபுரம் இணைந்து லேண்டருக்கான செயல்பாடுகளை வடிவமைத்துள்ளன.திரவ ஹைட்ரஜன், திரவ ஆக்சிஜன் கொண்ட மூன்று கட்ட என்ஜின்கள் வடிவமைக்கப்பட்டுள்ளன. மேலும் தரையிறங்குவதற்கு ஏதுவாக வேக குறைப்பு கட்டுப்பாட்டு கருவி பொருத்தப்பட்டுள்ளது. மேலும் தூசிகளை ஆய்வு செய்து தரையிறங்க போது பயன்படும் சென்சார், கேமராக்கள் அமைக்கப்பட்டுள்ளன.
மேலும் ஆயிரம் கிலோ திரவ எரிபொருள் லாண்டரில் உள்ளது. மேலும் தரையிறங்குவதற்கு ஏதுவாக முன்கூட்டியே ஆயிரக்கணக்கான புகைப்படங்கள் எடுக்கப்பட்டு நான்காயிரம் கிலோ மீட்டர் பரப்பளவு தரையிறங்கும் இடம் தேர்வு செய்யப்பட்டு உள்ளது. அதில் எந்த இடத்தில் வேண்டுமானாலும் தரையிறங்கும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது.
இது மட்டுமல்லாது ஏற்ற இறக்கங்களில் பயணம் செய்வதற்கு ஏதுவாக அதிநவீன தொழில்நுட்பங்களைக் ரோபோடிக் சிஸ்டம் பயன்படுத்தப்பட்டுள்ளது. சூரிய ஒளி மூலம் பேட்டரி சார்ஜ் செய்யும் வசதி மேலும் பல்வேறு இடர்பாடுகள் மத்தியில் சந்திரனின் லேண்டெர் செயல்படுவது குறித்து பல்வேறு கட்ட சோதனைகள் மேற்கொள்ளப்பட்டு தற்போது செயல்படுத்தப்பட்டு இருக்கிறது. இதனால் லாண்டர் வெற்றிகரமாக சந்திரனை தன்னுடைய பயணத்தை தொடங்கும் என்று கூறுகின்றனர்.
பெருமைமிக்க இந்த திட்டம் முழுமையான வெற்றி அடையும் பட்சத்தில் இந்தியா விண்வெளி ஆராய்ச்சி துறையில் தலைசிறந்த நாடாக இருக்கும் என்பது மாற்றுக் கருத்து இல்லை.