சென்னையும், IT நிறுவனங்களின் வளர்ச்சியும்!

Madras day 2023
TIDEL PARK CHENNAI
TIDEL PARK CHENNAI
Madras Day 2023
Madras Day 2023

மிழகத்தின் தலைநகரான சென்னைக்கு 384 வது ஆண்டு பிறந்தநாள். தொடக்கத்தில் ஒரு மீன்பிடி கிராமமாக இருந்து, தற்போது பரபரப்பான பெருநகரமாக மாறி இருக்கிறது சென்னை. சென்னையின் அபர்மிதமான வளர்ச்சி பல கலாச்சார பன்முகத்தன்மை மற்றும் தொழில்நுட்ப முன்னேற்றங்களைக் கண்டுள்ளது. 

சென்னையின் பல சாதனைகளுக்கு மத்தியில், அந்த நகரின் ஐடி துறையின் வளர்ச்சி மிகப்பெரிய திருப்புமுனையாக அமைந்தது. இது சென்னை நிலப்பரப்பையே மாற்றியமைத்தது மட்டுமின்றி உலகளவில் தொழில்நுட்ப மையமாகவும் சென்னை மாறியது. சென்னையின் பிறந்த நாளைக் கொண்டாடும் அதேவேளையில், இந்நகரில் ஐடி நிறுவன புரட்சி குறித்து இந்தப் பதிவில் காணலாம்.  

சென்னையில் தகவல் தொழில்நுட்ப வளர்ச்சி :

பிரிட்டிஷ் கிழக்கிந்திய நிறுவனத்தின் வருகைக்கு பிறகு ஒரு பெரிய வர்த்தக துறைமுகமாக வளர்ந்தது சென்னை.
ஆனால் சென்னையில் தொழில்நுட்ப வளர்ச்சி என்பது இருபதாம் நூற்றாண்டின் தொடக்கத்திலேயே உருவானது. இது சென்னை மாநகரின் குறிப்பிடத்தக்க மாற்றத்தை ஏற்படுத்தியது. தமிழ்நாட்டின் கல்வி வளர்ச்சி மற்றும் மனித ஆற்றல் காரணமாக சென்னையில் பல தகவல் தொழில்நுட்பப் பூங்காக்கள் மற்றும் மென்பொருள் மேம்பாட்டு மையங்கள் நிறுவ வழிவகுத்தன.

1990களில் டாடா கன்சல்டன்சி சர்வீஸ் மற்றும் காக்னிசென்ட் போன்ற நிறுவனங்கள் சென்னையில் செயல்பட ஆரம்பித்தன. இது நகரத்தின் அடையாளத்தை முற்றிலும் புதுமையாக மாற்றியமைத்து IT புரட்சி ஏற்பட கிக்ஸ்டார்ட் செய்தது.

சென்னையில் தகவல் தொழில்நுட்பத்தின அடித்தளங்கள்

  1. சென்னை நகரம், ஐஐடி மெட்ராஸ் மற்றும் அண்ணா பல்கலைக்கழகம் போன்ற மதிப்புமிக்க கல்வி நிறுவனங்களை கொண்டுள்ளது. இது தொழில்நுட்பத்தில் ஆர்வமுள்ள பட்டதாரிகளின் எண்ணிக்கை உயர முக்கிய பங்காற்றிவருகிறது.

  2. சென்னையில் மென்பொருள் மேம்பாடு, பொறியியல் மற்றும் தரவுப் பகுப்பாய்வு ஆகியவற்றில் சிறந்து விளங்கும் வல்லுநர்கள் இருந்ததால், உலகளாவிய தொழில்நுட்ப நிறுவனங்களின் கவனத்தை சென்னை ஈர்த்தது. 

  3. பிரத்யேக தகவல் தொழில்நுட்ப பூங்காக்களின் மேம்பாடு மற்றும் உலகத்தரம் வாய்ந்த உட்கட்டமைப்பு ஆகியவை, தொழில்நுட்ப நிறுவனங்கள் செழிக்கத் தேவையான சுற்றுச்சூழல் அமைப்பை சென்னை வழங்கியது. 

  4. சென்னை நகரின் காஸ்மோபாலிட்டன் கலாச்சாரம், அப்போதிருந்த மலிவான வாழ்க்கை செலவு மற்றும் துடிப்பான சமூக நடைமுறை ஆகியவை தொழில் வல்லுநர்கள் மற்றும் அவர்களின் குடும்பங்களுக்கு ஒரு சிறப்பான இடமாக அமைந்தது. 

  5. மாநில அரசின் முன்முயற்சியான கொள்கைகள் மற்றும் தகவல் தொழில்நுட்ப நிறுவனங்களுக்கான ஊக்குத்தொகை, IT துறையின் வளர்ச்சியை மேலும் எளிதாக்கியது. 

    சென்னையின் மாறும் எதிர்காலம்

    சென்னை தனது 384வது பிறந்த நாளைக் கொண்டாடும் வேளையில், பாரம்பரியம் மற்றும் நவீன துறைகளின் வளர்ச்சி நகரமாக இது திகழ்கிறது. தகவல் தொழில்நுட்ப நிறுவனங்களின் வளர்ச்சி சென்னையின் உலகளாவிய நிலையை உயர்த்தியது மட்டுமின்றி, வேலைவாய்ப்புகளையும் பொருளாதார வளர்ச்சியையும் உருவாக்கியது. அந்த பயணத்தை நினைவு கூறும்போது, சென்னை நகரின் அர்ப்பணிப்பு அதன் மாற்றத்திற்கு முக்கிய உந்து சக்தியாக இருந்ததென்பது தெளிவாகத் தெரிகிறது.

    சென்னை நகரின் எதிர்காலத்தைப் பார்க்கும்போது, இதுவரையில் அங்கு நடந்து வரும் வளர்ச்சியின் காரணமாக தொடர்ந்து சிறந்த தொழில்நுட்ப மையமாக சென்னை உருவாகும் என்பதில் எவ்வித ஐயமும் இல்லை. 

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com